நேற்றிரவு உலப்பனையில் முஸ்லிம் ஒருவருடைய கடை பற்றி எரிந்தது!

NEWS
0 minute read


உலப்பனை, பயனவங்குவ'யில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்று இனம் தெரியாதவர்களால் நேற்றிரவு தீ வைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்தன.

இது தொடர்பில் நாம் பிரதேசவாசிகளை தொடர்பு கொண்டபோது,

குறிப்பிட்ட முஸ்லிம்  நபர் அக்கடையை நடாத்தி வருவதுடன்  அங்கு அரசியல் கட்சி ஒன்றுக்கு  (SLPP தாமரை மொட்டு)  காரியாலயத்தையும் நடத்த அக்கட்டிடத்தை வழங்கி உள்ளார்.

தேர்தல் முடிந்து பெறுபேறுகள் வெளிவந்த  நிலையில் பிரிதொரு கட்சியினரால்    அக்கட்சி காரியாலத்திற்கு தீவைக்கபட்டு கடையும் சூரையாடபட்டு தீவைக்கபட்டுள்ளதாக  நம்பப்படுவதாக குறிப்பிட்ட பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பான  போலீசார் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.
6/grid1/Political
To Top