Top News

நாளை கொழும்பில் சில பாதைகளுக்கு பூட்டு


நாளை காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை கொழும்பில் சில பகுதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் பாதைகள் மூடப்படும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு, கோட்டை சைத்ய மாவத்தை, காலிமுகத்திடல் ஊடாக கொள்ளுப்பிட்டிய சந்தி, கொள்ளுபிட்டியவிலிருந்து வெள்ளவத்தை வரையான பாதைகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
தேசிய மரதன் ஓட்டப்போட்டிகளின் காரணமாக இவ்வாறு வாகனப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக போலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post