Imam Rija
வன்னி மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்கள் வருகை தந்ததுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புரையொன்றையும் ஆற்றியிருந்தார்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ மஸ்தான் காதர் அவர்களின் விஷேட அழைப்பின் பேரில் வருகை தந்த ஜனாதிபதி இம்முறை நடைபெறும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரிப்பதன் அவசியம் பற்றி தனது உரையில் சுட்டிக்காட்டியதுடன், மீள்குடியேற்ற செயலணியானது மக்களின் தேவையை கருத்திற்கொண்டு என்னால் உருவாக்கப்பட்ட போதிலும் சிலர் அதை தனிப்பட்டவகையில் தமது கட்சியால் நடைபெறும் வேலைத்திட்டங்களாக அதனை மக்களுக்கு காட்டி வாக்குகளை கொள்ளையிட முற்பட்டுள்ளனர்.
இவர்களையிட்டு மக்கள் மாத்திரமன்றி அரசாங்கமும் அவதானமாயிருக்கவேண்டிய தேவையெழுந்துள்ளதாக குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் காதர் மஸ்தான் அவர்கள் உரையாற்ற எழுந்த பொழுது மக்கள கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததை கண்ணுற்ற ஜனாதிபதி புன்னகை பூத்த முகத்துடன் மேடையில் காணப்பட்டார்.
பல்லாயிரக்கனக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.