இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது அதிருப்தி வெளியிட்டுள்ள, ஐக்கிய
நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைன், இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியனவற்றை ஊக்குவிப்பதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்தும் முக்கிய பங்கை ஆற்றவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
காணிகளை விடுவித்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல் மற்றும் அந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், நிலுவவையில் உள்ள வழக்குகளை தீர்த்தல் உள்ளிட்டவற்றை செயற்படுத்துவதில், இலங்கையில் போதுமான முன்னேற்றங்கள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 23 ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளது.
அந்த கூட்டத்தொடர் தொடர்பில் அவர் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. TM