தேசிய காங்கிரசில் இணைந்து அரசியலை தொடர எம்.ஏ அன்சிலுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஏ.எல்.எம் அதாஉல்லா, அட்டாளைச்சேனை பிரதேச சபைில் கூட்டாட்சிக்கு அன்சில் தரப்பிலிருந்து அதாஉல்லா அணியை அழைத்த போது தனை அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய காங்கிரஸ் என்பது மலிந்து போகும் இயக்கம் அல்ல, தனிப்பட்ட தேவைகளுக்காக யாருடனும் கூட்டுச்சேர தயாரில்லை, அப்படி சென்றதுமில்லை கட்சிக்கென ஒரு கொள்கை உள்ளது, முஸ்லிம் கூட்டு என்பது தற்காலத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது, குதிரைக்கட்சியின் பலத்தை அனைத்து சபைகளிலும் நிரூபித்துள்ளோம்.
விரும்பினால் எங்களுடன் வாருங்கள் அதில் உங்களுக்கு எதிர்காலம் உண்டு என்று சூசகமாக கூறியுள்ளார் அதாஉல்லா.