Top News

யாழ் மாநகரசபை உறுப்பினர் கே.எம் நிலாமை யாழ் நகர அங்காடி வியாபாரிகள் சந்திப்பு

பாறுக் ஷிஹான்

யாழ் மாநகரசபை உறுப்பினர்    கே.எம் நிலாமை வரவேற்கும் நிகழ்வினை யாழ் நகர அங்காடி வியாபாரிகள் முன்னெடுத்தனர்.

யாழ் மாநகரசபை தேர்தலில்  13 ஆம் வட்டாரத்தில்  ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து வேட்பாளராக  போட்டியிட்டு வெற்றி பெற்ற  கே.எம் நிலாமை அழைத்த அவ்வர்த்தகர்கள் மாலை அணிந்து   வரவேற்றதுடன் தங்களது நிறைகுறைகளையும் தெரிவித்துள்ளனர்.

இதன் போது மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் வர்த்தகர்களிடம்   இத்தேர்தலின்  முக்கியத்துவம் உணர்ந்து என்னை ஒரு உறுப்பினராக பாடுபட்ட உங்களுக்கு எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பினை பயன்படுத்தி   எமது  உரிமையை வென்றெடுக்க மாநகர சபையில் குரல் கொடுப்பேன் என உறுதி அளிக்கின்றேன்.
அத்துடன்  எமது எதிர்கால அபிவிருத்தி தொடர்பில்   எனது தலையின்  மீது  பாரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளதை உணர்கின்றேன் என கூறினார்.



Previous Post Next Post