Top News

புகையிலைச் சட்டம் கம்பஹாவிலும் அமுல் - பொலிஸ் அதிகாரி ஏ. கப்பார் தெரிவிப்பு



ஐ. ஏ. காதிர் கான் 

புகையிலை அடங்கிய வெற்றிலைச் சுருள்களை,  கம்பஹா மாவட்டத்தில் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, கம்பஹா தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரி ஏ. கப்பார் தெரிவித்துள்ளார். 
  

புகையிலை அடங்கிய வெற்றிலைச் சுருள்  சாப்பிடுவதனால், மனித உயிர்கள் பல வீணே பலியாகிறது. இதனாலேயே, அரசாங்கம் புகையிலை அடங்கிய வெற்றிலைச் சுருள் விற்பனையைத் தடை செய்துள்ளது. 
 
புகையிலை விற்பனையைத் தடை செய்யும் சட்டம், தற்போது  பாராளுமன்றத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், கம்பஹா மாவட்டத்திலும் புகையிலை அடங்கிய வெற்றிலைச் சுருள் விற்பனை செய்வோரைக் கைது செய்வதற்கும், இது தொடர்பில் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், சட்டத்தை துரிதமாக செயற்படுத்தப் போவதாகவும், பொலிஸ் அதிகாரி ஏ. கப்பார் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார். 


Previous Post Next Post