இன்று இடம்பெற்ற அமைச்சரவை - ஊடக சந்திப்பில் அம்பாறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களால்அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்விகள் கேட்கபட்டன.
இது தொடர்பில், குறிப்பாக கருத்தடை மருந்தை சாப்பாட்டில் கலந்து கொடுத்தது தொடர்பில் கேள்விகள் கேட்கபட்டு அவற்றுக்கு அமைச்சரின் பதில் வழங்கப்பட்டது
அதன் தொகுப்பு.
ஊடகவியலாளர் : இந்த கலவரத்திற்கு பின்னணியில் கருத்தடை மாத்திரை என்ற பிரசங்கம் மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பில் விசாரணைகள் பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டதா? சுகாதார அமைச்சர் என்ற வகையில் இதன் உண்மை தன்மை என்ன ?
அமைச்சர் ராஜித : இதுபோல் வைத்தியர்களுக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் வந்தன. நாங்கள் விசாரணைகள், பரிசோதனைகள் செய்து பார்த்தோம். அவை பொய் குற்றச்சாட்டுகள். அந்த இடத்தில் முஸ்லிம் அல்லது தமிழர் இருந்தால் சொல்வது அவர்கள் சிங்கள சனத்தொகையை கட்டுப்படுத்திகிறார்கள் என்று,,..
அது ஒரு ஹோட்டல், அதுபோல் செய்ய வைத்தியசாலை அல்ல. பொலிசாரும் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். உண்மை தன்மையை விரைவில் வெளிப்படுத்துவோம்.
ஊடகவியலாளர்: வீடியோ ஒன்று ரிலீஸ் ஆகியுள்ளதே. அதில் கடைக்காரரே ஒத்துக் கொள்கிறாரே அவர் கருத்தடை மாத்திரை போட்டதாக , சமூகவளைகளில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில் கடைக்காரரே ஒத்துக் கொள்வதை பற்றி என்ன கூறுகிறீர்கள்?
அமைச்சர் ராஜித : இதுபோன்ற சமூகவளைகளை பாவிப்பதே இனவாத நபர்கள் தான். அவர்களுக்கு வேண்டியதை எழுதலாம், வேறொருவரை கூறவைத்தும் கடை நபர்போல் காட்டலாம். எனக்கோ உங்களுக்கோ தெரியாது யாரை காட்டினார்கள் என்று. முந்திய காலங்களில் இதுபோல் இனவாதம் பரப்பிய நபர்களை கைதும் செய்துள்ளோம்.
ஊடகவியலாளர் அமைச்சரே இதுபோல் கருத்தடை மருந்துகள் இலங்கையில் உள்ளதா? ஆண்களுக்கும் கொடுக்க முடியுமா?
அமைச்சர் ராஜித : கருத்தடை மாத்திரைகள் உள்ளது பெண்களுக்கு தான் அவற்றை குடுக்கலாம். ஆண்களுக்கு கருத்தடை மருந்துகள் தேவையில். "மற்றது" போதும்.