கொழும்பு மாநகரசபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது. கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் 131,353 வாக்குகளுடன் ஐதேக 60 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது.
மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணி 60,087 வாக்குகளுடன், 23 ஆசனங்களைப் பிடித்துள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி 31,421 வாக்குகளுடன், 12 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது.
கொழும்பு மாநகரசபையில் 60 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள ஐதேக ஏற்கனவே தமது மாநகர முதல்வர் வேட்பாளராக ரோசி சேனநாயக்கவை, அறிவித்திருந்தது.
அவர் கொழும்பு மாநகரசபையின் முதல் பெண் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். ஒரு முஸ்லிம் ஒருவரை பிரதி மேராக்கும் பணியில், பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தீவிரம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.