கண்டி, தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி இறுதி நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ஹுஸைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரபல தொழிலதிபர் அல்-ஹாஜ் புஹாரி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன் பாடசாலையின் முன்னாள் அதிபர்களான எம்.எஸ்.எம். சபீக், எம்.ஏ.எம். நஜீப் மற்றும் கே.எம். ஜெய்னுலாப்தீன் ஆகியோர் சிறப்பதிதிகளாக கலந்து கொண்டனர்.
பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் அபிவிருத்திக் குழுவின் பூரண ஒத்துழைப்புடன் மிகச்சிறப்பாக நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் முதலிடத்தை லோடஸ் இல்லம் பெற்றுக்கொண்டதுடன், ஓகிட் மற்றும் ஜெஸ்மின் இல்லங்கள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.