டெங்கு காய்ச்சல் காரண மாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 வயது டைய பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கற்பிட்டி சின்னக்குடியிருப்பைச் சேர்ந்த முஹம்மட் பைரூஸ் முஹம்மது ஹனிக் எனும் 9 வயது சிறுவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குடும்பத்தில் மூன்றா வது பிள்ளையான குறித்த மாணவர்கற்பிட்டி அல்ஹிரா பாடசாலையில் 4ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மாலை காய்ச்சல் காரணமாக குறித்த மானவர் கற் பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், எனினும் உடல் நிலை மோசமடைந்து காணப் பட்டமையினால் குறித்த மாணவன் அன்றிரவே மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசா லைக்கு மாற்றப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
| இவ்வாறு கடந்த சனிக் கிழமை இரவு புத்தளம் தள வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக குறித்த மாணவன் அனுமதிக்கப்பட்ட போது, டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு இருப்பதாக அந்த மாணவனை பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர்கள் உறுதிபடுத் தியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ச்சியாக வைத்தியசாலையில் மிகத் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த மாணவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது.
உயிரிழந்த மாணவரின் ஜனாஸா நேற்று புதன்கி ழமை காலை கற்பிட்டி பஸார் பள்ளி ஜும் ஆப் பள்ளி முஸ்லிம் மையவா டியில் நல்லடக்கம் செய் யப்பட்டது.
குறித்த மாணவனின் ஜனாஸா நல்லடக்கத்தில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண் டனர்.
புத்தளத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப் பட்ட பலர் வைத்தியசா லைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்
றனர் எனத் தெரிவிக்கப்ப டுகிறது.
எனினும், முன்னரை விடவும் தற்போது டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனு மதிக்கப்படும் நோயாளி களின் வீதம் குறைவடைந் துள்ளதாக புத்தளம் தள் வைத்தியசாலைத் தக வல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, புத்தளம், கற்பிட்டி, பிராந்திய சுகாதார வைத்திய அதி காரி காரியாலயங்கள், பிரதேச செயலகங்கள், பொலிஸார் ஆகியோரின் ஒத்துழைப்புக்களுடன் புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச சபை மற்றும் கற்பிட்டி பிரதேச சபை என்பன தங்களது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- விடிவெள்ளி-