Top News

இறைமையும் மக்கள் ஆட்சியும்!



‘மனிதப் பிறவியினர் அனைவரும் சுதந்திமாக பிறக்கின்றனர். அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் நியாயத்தையும் மனசாட்சியையும் இயற்பண்பாக பெற்றவர்கள்...’சர்வதேச மனித உரிமைகள் பிரகடணத்தின் உறுப்புறை ஒன்று இவ்வாறு கூறுகிறது.

ஜனநாயக ஆட்சி நிலவும் ஒரு நாட்டில் வாழும் சகல பிரஜைகளுக்கும் உரித்தான உரிமைகளுக்கு மேலதிகமாக குறிப்பிட்ட நாட்டின் அரசியல் அமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளும் உண்டு.

 நாட்டின் தலைமையில் இருந்து ஆரம்பித்து சாதாரண பிரஜை வரை சட்டத்தின் ஆட்சியை ஏற்க வேண்டியுள்ளது. சட்டத்தின் ஆட்சிக்கு உட்படாத நாட்டில் அராஜகமே நிலவும். கடந்த கால சம்பவங்கள் இதற்கு  தக்க சான்றுகளாகும்.

தேர்தலின் போது தான் விரும்பிய அரசியல் கட்சிக்கு வாக்களிக்கும் உரிமையை பெறுவது சகல பிரஜைகளினதும் உரிமையாகும். ஆனால் மேற்படி உரிமையை மீறும் சந்தர்ப்பமும் உண்டு.

இலங்கையில் 1999 ஜனவரி 25ம் திகதி இடம் பெற்ற வடமேல் மாகாண சபைத் தேர்தலின் போது பிரஜைகளுக்குரிய மேற்படி உரிமை படு மோசமான முறையில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு சந்தர்ப்பமாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

மேலும் 1999 ஏப்ரல் 06ம் திகதி இடம் பெற்ற மத்திய மாகாண சபைத் தேர்தலின் போது இடம் பெற்ற தேர்தல் ஊழல் மோசடிகள் காரணங்களினால் சுதந்திரமன தேர்தலுக்கான தமக்குரிய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதென கூறி 04 வாக்காளர்களால் சமர்பிக்கப்பட்பட்ட மணுவை பரிசீலனை செய்த உயர் நீதிமன்றம் கண்டி மாவட்டத்தின் 23 தோ்தல் நிலையங்களில் நியாமான தோ்தல் இடம்பெறவில்லை என்றும் வழக்கு தொடர்ந்த 04 வாக்காளர்களுக்கும் வழக்குச்செலவை கட்டணமாக கொடுக்கும்படி நீதிமன்றம் கட்டளை இட்டது.

இதிலிருந்து நீதியானதும் நியாயமானதும் தேர்தலின் தன்மை புலப்படுகின்றது. மேலும் இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் நீதியானதும் நியாயமானதும் தேர்தல் உன்மையின் வெளிப்படை தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
அரசியல் என்ற சொற் பிரயோகம் அநேகமாக தேர்தல் நெருங்கும் போது மட்டுமே அனைத்து மக்கள் மத்தியிலும் பேசு பொருளாக அமையும். தேர்தலின் பின்னர் பொதுமக்கள் அரசியலின் யததார்த்தத்தை மறந்து தேநீர் கடைகளில் பொழுதுபோக்கு பேச்சுக்கு பயன்படுத்த தொடங்கி விடுவார்கள்.

ஆனால் அரசியல்வாதிகள் 'அரசியல்' எனும் வார்த்தையை தொடர்சியாக பேசு பொருளாக பயன்படுத்துவார்கள். இந்த நிலைமையானது அரசியல்ரீதியில் பின்னைவை கொண்டுள்ள நாடுகளின் கலாச்சார பண்புகளில் ஒன்றாகும். 
முன்னேற்றகரமான அரசியல் கலாச்சாரம் கொண்ட நாடுகளில் பிரஜைகள் அரசியலில் செயற்பாட்டுரீதியிலான பங்காளர்களாக கணப்படுவார்கள்.

ஆனால் எமது நாட்டு பிரஜைகள் தேர்தலில் வாக்ககுகளை இட்ட பின்னர் ஆட்சியாளர்களிடம் அனைத்து பொறுப்களையும் வழங்கி விட்டோம் என நினைத்து அமைதியாக தத்தமது நாளாந்த செயற்பாடுகளுக்கு திரும்பி விடுவார்கள். ஆனால் மேலை நாட்டு பிரஜைகள் இவ்வாறு இல்லை.

சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் 1ம் வாசகத்தில் குறிப்பிடப்பட்டதிற்கு அமைவாக ஒவ்வெருவரும் தத்தமது நாட்டின் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமாக தொிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ பங்கு கொள்ளும் உரிமை பிரஜைக்கு உண்டு. மேலும் 3ம் வாசகத்திற்கு அமைவாக மக்களின் விருப்பே அரசாங்கத்தின் அடிப்படையாக அமைதல் வேண்டும். இவ் விருப்பானது காலத்துக்கு காலம் இடம் பெறும் ஜனநாயகமான தேர்தல் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

பொதுமக்கள் இறையாண்மை எனும் அதிகாரத்ததை வாக்களிப்பின் மூலம் ஆட்சியாளர்களுக்கு தற்காலிகமாக ஒப்படைக்கின்றனர். ஆட்சியாளர்கள் இறையாண்மையை அமுல்படுத்துகின்னர். மேற்படி அதிகாரத்தை மக்களுக்கு எதிராக பயன் படுத்துவார்களாயின் அவ் அதிகாரத்ததை குறித்த ஆட்சியாளர்களிம் இருந்து மீட்டெடுக்கும் சக்தி பொதுமக்களுக்கு உண்டு. இதன் முலம்  பொதுமக்கள் அரசியல் துறையில் அறிவார்ந்த பங்காளர்களாக திகழமுடியும்.

மக்களது இறையாண்மையை உன்மையிலேயே உறுதிப்பபடுத்த வேண்டும் எனறால் அதிகார பகிர்வு கீழ் இருந்து மேலாக வளர்ச்சி அடைந்து செல்ல வேண்டும். இதற்கு சான்றாக இந்தியாவில் ஜனநாயக ஆட்சி முறையான பஞ்சாயதத்து போன்ற சிறிய அலகுகளுக்கு அதிகாரத்தை வழங்கும் நிர்வாக கட்டமைப்பை உருவாக்குதல் தொடர்பில் இலங்கையில் பல தசாப்தங்களாக பேசப்பட்டு வந்த போதிலும் இற்றைவரை அது யதார்த்தமாகவில்லை.

ஆனால் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட அரசியல் யாப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகள் அனைத்திலும் 'கிராம இராச்சியம்' எனும் எண்ணக்கரு விவாதிக்கப்பட்டதுடன் பொதுவாக பார்க்கும் போது அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு கீ்ழ் மட்டத்தில் இருந்து அதிகார பரவலாக்கல் செய்தல், அதிகார ஒப்படைப்பு செய்தல் தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டில் இருப்பது தெளிவாகிறது.

 மேலும் தற்போதய ஜனாதிபதி மற்றும் தற்பொதய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் 'கிராமிய இராச்சிய முறை' நிறுவப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டிருந்ததுடன், அதற்கென பிரதமரினால் விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு அக்குழுவின் விதந்துரைகள்  பாராளுமன்ற உள்ளக நிர்வாக, பொது முகாமைத்துவ துறைசார் மேற்பார்வை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள போதும் இதுவரை இறுதித் தீர்மாணம் எடுக்கப்படவில்லை.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் உள்ளூராட்சி என்பது குடிமக்களின் அன்றாட வாழ்கையில் தாக்கம் செலுத்தும் மிகவும் தொடர்புடைய நெருக்கமான ஓர் அதிகார சபையாகும். எனவேதான் இதன் செயற்படு தன்மையை விணைத்திறனாக மாற்றி அமைக்கும் வகையில் முக்கிய இரு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. முதலாவது வட்டார முறையில் பிரதிநிதிகளை நியமித்தல் இரண்டாவது பெண்களின் 25% பிரதிநிதித்துவம். பெண்களின் பிரதிநிதித்துவம் வரவேற்க கூடிய ஒன்று.

ஆனால் தற்போதய உள்ளூராட்சி சபைத் தேர்தலினை நோக்ககும் போது பெண்களின் பிரச்சாரங்கள் மந்த கதியிலேயே செல்கிண்றது. இதற்கு சமூக, சமய,கலாச்சார மற்றும் பல காரணிகள் காரணங்களாக காணப்படுகிண்றது. எது எவ்வாறாக இருப்பினும் தேர்தலின் பின்னர் அமையப் பெறும் உள்ளூராட்சி மன்றங்கள் அதிக வளங்கள் மற்றும் அதிகூடிய சேவைகளை கொண்டு அமையப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

பொதுவாக உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் வழங்கக் கூடிய சேவைகளாக பொதுச் சுகாதாரம், திண்ம கழிவகற்றல், கிராமிய பாதைகளை அமைத்தலும் பராமரித்தலும், வடிகாண் அமைத்தலும் பராமரித்தலும், தெருவெளிச்சம், சிறுவர் பூங்காக்களை அமைத்தல், விளையாட்டு வசதிகளை எற்படுத்தி கொடுத்தல், சுடுகாடு மற்றும் மையவாடிகளை அமைத்தலும் பராமரித்தலும், நூலக வசதிகளை எற்படுத்தல், பொது மலசலகூடம் அமைத்தலும் பராமரித்தலும், கிராமிய நீர் விநியோகம், பொது நீராடல் நிலையங்களை அமைத்தல், தீயணைப்பு சேவைகள், தாய் சேய் நலப்பணி கட்டிடங்களை அமைத்தல், தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள், திடீர் அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள், கிராமிய மின்சாரம், வீடமைப்பு திட்டங்கள், கல்வித் தளபாடம் வழங்குதல், அபிவிருத்தி கருத்திட்டங்களை இனம் கண்டு நடைமுறைைப்படுத்தல், கால்நடை நலச் செயற்பாடுகள், வறியவர்களுக்கு நிவாரணம் வழங்குதல், மற்றும் பல.... இவை அனைத்தும் மக்களாகிய எமது வரிப்பணத்திலும் வெளிநாட்டு நன்கொடை மற்றும் கடன் உதவிகள் மூலமும் ஓர் பொதுவான ஒதுக்கீட்டின் படி உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் மக்களாகிய எம்மை வந்தடைகிறது. இதன் போது பல ஊழல் மோசடிகள் இடம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவேதான் சேவைகளின் நிதிப்பயன்பாடு தொடர்பில் மக்கள் மயப்படுத்தப்பட்ட வெளிப்படை தன்மையின் தேவை உணரப்படுகிறது.

ஆகவே எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இறைமையை வழங்கும் அதிகாரம் கொண்ட வாக்காளர்களாகிய நாம் சுய நலம் அற்று பொது நலத்துடன் சேவையாற்றக்கூடிய சிறந்த ஆழுமையும் இறை அச்சமும் கொண்ட சேவையாளனை அடையாளம் கண்டு வாக்குகளை இட வேண்டும்.

அதே சமயம் கடந்த அதிகாரத்தில் இருந்த பிரதிநிதி செய்த சேவைகள் ஊழல்கள், சுய நலம் கருதிய செயற்பாடுகள் தொடர்பில் கவணம் செலுத்துதலும் நீதியானதும் சுதந்திரமான தேர்தைலையும் பிரஜை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் இறைமையை தவறாக பயன்படுத்தும் போதும் சேவைகளை சரியாக செய்யாத சந்தர்பம் அடையாளம் காணும் போதும் பிரதிநிதியை அதிகாரத்தில் இருந்து துரத்தியடிக்கும் அறிவும் ஆற்றலும் உள்ள மக்களாக நாம் மாற்றமடைய வேண்டும்.

ஆக்கம் 
ஜெ.எம். தஜ்மீல் (BSW)


 





Previous Post Next Post