Top News

கோறளைப்பற்று மேற்கு மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் கௌரவிப்பு விழா




எம்.ரீ. ஹைதர் அலி

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றி ஓய்வுபெற்ற, பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் பெற்றுச்சென்ற உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பிரதான மண்டபத்தில் 2018.02.25ஆம்திகதி - ஞாயிற்றுக்கிழமை (இன்று) பிற்பகல் 12.30 மணியளவில் பகற்போசண விருந்துபசாரத்துடன் வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம். முஸ்தபா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் கதாநாயகர்களாக இவ்வைத்தியசாலையில் வைத்தியர்களாக கடமையாற்றிய வைத்தியர்களான சுஹைர் காசிம் மற்றும் பிரதீபன், தாதி உத்தியோகத்தர்களாக கடமையாற்றிய சிறிதர தீனன் மற்றும் திருமதி. ஜெபமலர் ஜெயஸ்வரன், அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய சர்ஜூன், முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றிய நௌபல், சாரதிகளாக கடமையாற்றிய தேவன், றபீக், கிருஸ்னராஜ், பதிவாளர்களாக கடமையாற்றிய நியாஸ், திருமதி. யாஸீன் பீவி, திருமதி. மர்ழியா, திருமதி. றிபாயா, சிற்றூழியர்களாக கடமையாற்றிய பர்ஸான், பாஸில், திருமதி. சல்மா, திருமதி. மஸாஹிரா, திருமதி. நிஹாரா, திருமதி. பிர்தௌஸியா, திருமதி. காதிரிய்யா, திருமதி ஆசியாமுத்து, திருமதி. பரமேஸ்வரி மற்றும் திருமதி. பிரின்ஸ் தயாநிதி ஆகியோரும் பரிசில்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதில் விஷேட அம்சமாக இவ்வைத்தியசாலையில் 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி நடுப்பகுதிவரை சுமார் 15 வருடகாலாக தனது வைத்தியசேவையினை மக்களுக்கு வழங்கி இவ்வைத்தியசாலையிலிருந்து ஓய்வுபெற்ற வைத்தியர் திருமதி பாலச்சந்திரன் பூமணியம்மா அவர்கள் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு, வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் ஆகியவற்றினால் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு, நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இவ்வைத்தியசாலையின் உருவாக்கத்தின் ஆரம்ப கால வரலாறுகளை மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் பரிபாலன சபையின் உப தலைவர் அல்ஹாஜ். ஏ.எல். அலியார் சபையில் விபரித்து உரையாற்றியதுடன், இவ்வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர்களையும் கௌரவத்துடன் நினைவு கூறினார்.

அத்துடன், இவ்வைத்தியசாலையில் தற்போது அமையப்பெற்றுள்ள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் இவ்வைத்தியசாலையின் நன்மைகருதி முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், குறிப்பாக இவ்வைத்தியசாலையினை தரமுயர்த்துவதற்கும், புதியதொரு மாடிக் கட்டிடம் ஒன்றினையும் பெற்றுக்கொள்வதற்கு அயராது உழைத்துக் கொண்டிருக்கும் இவ்வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினரின் அளப்பரிய பங்களிப்புக்களையும், இவர்களின் குறுகிய காலப்பகுதியில் இவ்வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகள் தொடர்பாகவும் சபையில் வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம். முஸ்தபா பாராட்டி பேசினார்.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நஜிப்கான்,மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயல் பரிபாலன சபை, மீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழு, வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரான மர்சுக் மற்று உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Previous Post Next Post