பலஸ்தீனில் இருந்து இஸ்ரேலை வெளியேற்றும் வரை அமெரிக்காவின் எந்த முடிவும் தம்மை திசை திருப்பாது

NEWS

பலஸ்தீனில் ஆக்கிரமிப்புச் செய்யும் இஸ்ரேலை வெளியேற்றுவதற்கான போராட்டத்தை  தொடர்ந்து முன்னெடுப்பதில் இருந்து அமெரிக்காவின் எந்த முடிவும் தம்மை திசை திருப்பாது என  ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இஸ்மாஈல் ஹனியாவை தடைப்பட்டியலில் சேர்ப்பது பயனற்ற ஒன்று என்றும் ஹமாஸ் கண்டித்துள்ளது. ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை,  அமெரிக்காவின் இந்த முடிவை தாம் நிராகரிப்பதோடு கண்டிக்கிறோம் எனவும் அமெரிக்க தீர்மானத்தில் சியோனிச குண்டர்களின் ஆதிக்கத்தையே இது பிரதிபலிக்கிறது எனவும் காஸாவின் ஹமாஸ் அதிகாரி சமி அபூ சுஹ்ரி ரோய்ட்டர் செய்திச் சேவைக்கு அறிவித்துள்ளார்.
ஹமாஸ் இயக்கத்தின் சிரேஷ்ட அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாவை, அமெரிக்காவின் “உலகளாவிய தீவிரவாதிகள்” (Global Terrorist) பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
6/grid1/Political
To Top