பைஷல் இஸ்மாயில்
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை தைானத்தில் நேற்று (31) நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுஉரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அதாஉல்லாவின் தலைமையில் நடைபெற்ற இப்பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரோ, இராஜாங்க அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, சிறியானி, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நான் இந்த நாட்டை கள்வர்களிடம் கொடுக்க மாட்டேன். ராஜபக்ஷ அண்டு களவு கொடுக்க இடம்கொடுத்ததைப்போன்று நான் எனது ஆட்சியில் களவுகள் இடம்பெற ஒருபோதும் இடம்கொடுக்க மாட்டேன். எனது ஆட்சிக்குள் களவு செய்ய முனைகின்ற ஐக்கிய தேசியக் கட்சியினர்களுக்கும் நான் இடம்கொடுக்க மாட்டேன். அவ்வாறானவர்களை நான் கண்டுகொண்டால் உடன் விலக்கி விடுவேன். என்னுடைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களும் இவ்வாறான தவறுகளைச் செய்தால் அவர்களையும் விலக்கி விடுவேன்.
இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றவர்கள் களவெடுக்கினற அரசியல்வாதிகள் தான் என்பைதை நீங்கள் மறந்து விடக்கூடாது. அவர்கள் அரசியலுக்கு வந்த பிறகு மக்களின் பணங்களை களவெடுக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். அதனால்தான் எமது நாட்டை ஒரு முன்னெற்றப் பாதைக்கு கொண்டு செல்ல முடியாமல் போய்விட்டது.
கள்வர்கள் இல்லாத ஒரு அரசாங்கத்தை நான் உருவாக்குவேன். அதற்காக இன்றுவரை நான் பாடுபட்டு உழைத்துக்கொண்டு வருகின்றேன். களவு எடுக்கின்றவர்களுக்கு எனது அரசாங்கத்தில் யாருக்கும் இடமே இல்லை. அவ்வாறானவர்களை நான் அடையாளம் கண்டுகொண்டால் அவர்களுக்கு எதிராக சட்டத்தை சரியாகச் செய்து வருகின்றேன்.
இங்கு பிரதேச சபைக்கு போட்டியிடுகின்றவர்கள் சரியாக தங்களின் பணிகளை மக்களுக்குச் செய்யவேண்டும். பிரதேச சபைக்கு தெரிவாகின்றவர்கள் நல்லவர்களாகவும், களவு செய்யாதவர்களாகவும் மக்களுக்கு சிறந்த சேவைகளைச் செய்பவர்களாக இருக்கவேண்டும். நாம் இந்த மக்களுக்கு நம்பிக்கையாக இருந்துகொண்டு சிறந்த சேவைகளைச் செய்யவேண்டும் என்றும் எம் மக்களுக்கான சேவைகளை சரியாகவும், நேர்மையாகவும் செய்யவேண்டும் என்று நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
அவ்வாறு செய்வோமானால் அவர்கள் மாகாண சபை என்றும், பாராளுமன்றம் என்றும் செல்வார்கள்.
எமது நாட்டில் படித்த இளைஞர்கள், யுவதிகள் இருக்கின்றார்கள் அவர்களிடம் இந்த நாட்டை நாம் பாரம் கொடுக்கவேண்டும். இந்த நாட்டை அவர்களிடம் ஒப்படைக்க நாம் முன்வரவேண்டும். படித்த இளைஞர், யுவதிகளிடமுள்ள சக்தி பாரிய சக்தியாக இருக்கின்றது. அவர்களின் சக்தியை பலம் வாய்ந்த சக்தியாக மாற்றியமைக்க நாம் ஒன்றிணையவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.