Top News

எமது சமூகம் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்!

            

              
தேர்தல் காலம் என்றாலே கட்சிகளும் சுயட்ச்சைகளுக்கும் தங்களை அடை காத்தூக்கொள்வது வழமை ஆனாலும் தற்போது நம் நாடு ஓர் புதிய பாதையில் புதுயுகத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை தற்க்கால சூழலில் ஓர் புதிய தேர்தல் முறையின் கீழ் எமது சமுகத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டியுள்ள தேவை உள்ளது . 

குறிப்பாக இத் தேர்தலைப் பொறுத்த மட்டில் எமது முஸ்லிம் சமூகம் எப்படி கையாளப் போகின்றது என்பது பற்றி சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம் இவ் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெரும்பான்மைக் கட்சிகள் வகுத்த வியூகங்களும் சிறுபான்மை கட்சிகள் வகுத்த வியூகங்களுக்கும் சற்று வித்தியாசமானவை தான் எது எப்படி இருந்தாலும் இதனை முஸ்லிம் சமூகம் இவ் விடயங்களை கையாண்டுள்ளது எதிர்கால நகர்வலைகள் என்ன என்பது பற்றி சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம் இதற்காக எம்மை ஆளும் பிரதிநிதிகளின் வகி நிலையானது ஏட்டிக்குப் போட்டியான நிலையில் எம் மத்தியில் நிலை நிறுத்தியுள்ளது. 

குறிப்பாக தற்கால சூழலில் ஒற்றுமை என்ற பலம் எம் சமுகத்தில் இதன் வகி நிலை குறைவாகத் தான் இன்றைய காலத்தில் காணப்படுகின்றது. சமகால அரசியல் சூழ் நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.எது எப்படி இருந்தாலும் தன் கொள்கை சரி என்பதை தூக்கிப் பிடித்துக்கொள்கிறார்கள் இதற்காக சம நிலை வகி பங்கு என்பது தொடர் கேள்விக் குறியாக மாறியுள்ளத்தைக் காணலாம். உரிமை என்பது அனைத்து இனமக்களுக்கும் பொதுவானதாகும் இது சரியாக கையாளப்படும் போதே எமக்கான சுதந்திரம் கிடைக்கின்றது .வாக்குரிமைப் பொறுத்த மட்டில் நாம் விரும்பியவர்க்கு அளிக்கலாம்.

வாக்குரிமையை பொருத்த மட்டில் எமது சமூகம் எவ்வாறு பயன்படுத்தப்போகின்றது என்பது இன்றுள்ள பாரிய சவாலாகவே உள்ளது. ஏனெனில் குறிப்பாக நம்மவர்கள் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பது குறைவாக காணப்படுவதாகும். அது மட்டுமல்லாமல் எமக்கான அரசியல் ரீதியான எமது உரிமைத் தேவைப்பாடுகள் என்பது பற்றிய தெளிவின்மையும் பிரதான காரணமாகும். இதனை கடந்த கால பிழைகளாக எடுத்துக்கொள்ளலாம். இதற்கான தீர்வை முன்வைப்பது எம் அனைவரினதும் கடமையாகும்.

உரிமை என்பது ஓர் நாட்டில் வாழும் அனைத்து இனங்களுக்கும் பொதுவானதாகும். இது சரியாக கையாளப்படும் போதே எமக்கான சுதந்திரம் கிடைக்கின்றது. எமக்கான அடையாளத்தையும் இருப்பிடத்தையும் நமது வாக்கே தீர்மானிக்கின்றது. எமக்குள்ளே பல கட்சிகள் தோன்றுவதால் சிதறலடைகின்றன. இதனாலட அழிவடைவது எம் சமூகத்தின் தலைவிதியே. 

புரிந்துணர்வின் மூலம் ஓர் தலைமையின் கீழ் ஒற்றுமை என்ற சகோதரத்துவம் கட்டியெழுப்பப்படும் போதே எமக்கான அடையாளங்கள் சரியாக தீர்மானிக்கப்படுகின்றது. அதன் வெளிப்பாடாக வெற்றி அடைவதன் மூலம் எமது சமூக ஒற்றுமையை பறைசாற்றி உரிமைகளை வெல்லலாம். இதன் வெளிப்பாடு மாறிவிட்டால் கேள்விக்குறியில் எமது சமூகம் திசைமாறி பயணித்து விடும் மேலும் அதன் இருப்பையும் அழித்துவிடும்.

நாம் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் நமக்கான சரியான திட்டங்களை வகுக்கின்றார்களா வாக்குறுதிகள் சரியாக முறையில் பயன் படுத்த படுகின்றதா? என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும் கடந்த கால தவறுகளை திருத்தியுள்ளார்களா? இவர்களின் எதிர்கால இலக்குகள் என்ன? என்ற கேள்விக்கான விடைகளை நாம் தேட வேண்டும் இவர்களினால் தவறுகள் ஏற்படுமாயின் இவர்களை நாம் நிராகரிக்க வேண்டிய கடமை நம் ஒவ்வருவர்க்கும் உண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாதது.

 பதவி என்பது அமானிதமாகும் இதனை சரியான முறையில் பயன்படுத்துவர்களின் கைகளில் நாம் கொடுக்க வேண்டும் அப்போது தான் இந்தச் சமூகம் ஓர் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் குறிப்பாக இவ் புதிய வடடார தேர்தல் முறையில் நாம் நேரடியாக ஓர் பிரதிநிதியை தெரிவு செய்ய வேண்டியல் நிலையில் உள்ளோம் .ஓர் உறுதியான தன்னலமற்ற மக்கள் சேவகனாக இருக்கு போதே நம் பிரதேசமும் நாடும் வளர்ச்சி பெறும். 

குறிப்பாக எமது சமூகத்தில் பல பிரச்சினைகள் இன்று தலை விரித்தடுக்கின்றது இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மெட்கொள்ளப்பட வேண்டும் .இதனை சீர் செய்ய நம் அரசியல் தலைவர்களின் பொறுப்பாகும். பொறுப்புமிக்க செயல் தலைவர்களுக்காக அவர்களின் உறுதிப்பாட்டை நாம் சமூகம் ஆதரிக்கும் போதே நமது உரிமைகள் சீர் செய்யபடும். கொள்கைகள் மற்றும் பிளவுக்கள் காணப்படுமாயில் இவ் பரந்த உலகில் பிரிந்த சமுகமாய் நாம் மாறி விடுவோம்..

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில்  முஸ்லிம்கள்செறிந்தது வாழ்கின்றனர் குறிப்பாக இங்கு எமது  சமூக கட்சிகள் அரசியல் விடயங்களில் பிரிந்து செல்கின்றனர் இது எம் சமூக விடியலை துரமாக்கிவிடும் என்பது யதார்த்தமாகும் கிழக்கு மாகாண  முஸ்லிங்களின் அரசியல் பலமானது  மீள் எழுச்சி பெற வேண்டும் நமது அரசியல் பலத்தை நிருபிக்க வேண்டும். 

   இதன் மூலம் நம் நாட்டில் வாழும் எமது முஸ்லிம் மக்களின் அனைத்தும் பிரச்சினைகளையும் தீர்க்கலாம் இத்ற்கு எமது வாக்கு பலம் சரியாக இருக்க வேண்டும் குறிப்பாக எமது நாட்டில் வாழ் கின்ற ஒட்டு மொத்த முஸ்லிங்களும் சரியான முடிவை எடுக்க வேண்டும் இது ஜனநாயகம் மட்டுமல்ல எமது சமூக விடிவும் கூட இதனை நாம் அனைவரும் சிந்தித்து செயற்படுகின்ற போதே எம் சமுகத்தின் தலை விதி சரியாக எழுதப்படும்.

         (எம்.என்.எம்.அப்ராஸ்-கல்முனை)   
Previous Post Next Post