Top News

சகல அரச நிறுவனங்களும், பத்தரமுல்லைக்குச் செல்லும் - சம்பிக்க ரணவக்க



அனைத்து அரச நிறுவனங்களையும் பத்தரமுல்ல நிர்வாக நகருக்கு கொண்டு செல்லப்படும் என பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி அலுவலகம், பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம், பிரதமர் அலுவலகம் போன்றவையும் பத்தரமுல்ல பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்படும்.

மேற்கு வலய பெருநகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட பத்தரமுல்ல அபிவிருத்தி திட்டத்தை வெளியிடும் வைபவத்தில் அமைச்சர் உரையாற்றினார்.

நிர்வாக நகரில் ஏற்கனவே 113 அரச நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் செற்சிறிபாய இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நிர்மாண பணிகள் இவ்வாண்டு ஆரம்பமாகும். இவை பூர்த்தியான பின்னர் ஏனைய அரச நிறுவனங்களும் அங்கு கொண்டு செல்லப்படும்.

வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் இலகு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கு ஜப்பான் உதவி செய்யவுள்ளது.

இலகு ரயில் சேவைக்கான கட்டுமாண வேலைகள் இவ்வாண்டு கடைசிப் பகுதியில் தொடங்கப்படவுள்ளன. பல்நோக்கு போக்குவரத்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு தனியார் துறையின் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்

எனினும் அரசாங்கத்தின் இந்த செயற்பாடு குறித்து பல அரசாங்க ஊழியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தற்போதைய அரச நிறுவனங்களுக்கு அருகிலுள்ள பலர் நீண்ட தூர பயணத்தின் மூலம் பத்தரமுல்ல செல்ல வேண்டும் என அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் காணப்படும் வாகன நெரிசலை கட்டுப்படும் நோக்கில் நிர்வாக நகரம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதன்மூலம் காலை மற்றும் மாலை வேளையில் அதிக வாகன நெரிசல் ஏற்படும் என அரசாங்க ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Previous Post Next Post