ஹசன் ஜவாத்
தம்பி தவம் என செல்லமாக அதாஉல்லாவால் அழைக்கப்படும் எனது நண்பர் ஏ.எல் தவம் இனி அரசியலில் ஈடுபடாது அவர் படித்த படிப்புக்கு ஒரு நல்ல வேலை தேடி செல்வது அல்லது ஜப்பான் செல்வது நல்லம் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம் சபீஸ் தெரிவித்துள்ளார்.
என்னுடைய பலாஹ் வட்டாரம் மட்டுமின்றி இன்னும் 5 வட்டாரங்களில் அமோக வாக்குகள் பெறுவோம் என தம்பட்ட அடித்த தவம் அவர்கள் ஆகக்குறைந்தது ஒரு வட்டாரத்திலும் வெற்றிபெறவில்லை, அவர் நினைத்திருக்க மாட்டார் இப்படி ஒரு தோல்வி கிடைக்கும் என்று, அதாஉல்லா என்பது அவர் நினைப்பது போலல்ல இந்த தலைமைக்குள் எவ்வளவு சக்தி இருக்கும் என்பதை நன்றாக பாடம் படித்திருப்பார்.