Top News

வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையில் அரசியல் வேண்டாம்!



வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை முடிவடைந்த பிறகு, வீதிகளில் ஆங்காங்கே நின்று, தேர்தல் மற்றும் அரசியல் தொடர்பிலான எந்தவித பேச்சுக்களிலும் ஈடுபடுவதை, முற்றாகத் தவிர்ந்து கொள்ளுமாறு, கம்பஹா மாவட்ட மக்கள் நலன் பேணும் அமைப்பு , முஸ்லிம் மக்களிடம் பணிவான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

   இதேவேளை, ஜும்ஆப் பிரசங்கங்களில் அரசியல் சம்பந்தமாகப் பேசுவதையும், ஊர் ஒற்றுமைப்பட்டு வாக்களிப்பது தொடர்பாக பிரசங்கம் நிகழ்த்துவதையும் இயன்றளவு தவிர்ந்து கொள்ளுமாறும், அவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

   அத்துடன், இத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில், தாக்குதல் நடத்தி அல்லது வேறு ஏதாவது ஒரு முறையில் விளைவுகளை ஏற்படுத்தி அல்லது  வன்முறைகளையும், வெறுப்புணர்வுகளையும் தூண்டிச் செயற்பட வேண்டாம் என்றும், அமைப்பின் தலைவர் டாக்டர் எம்.எச்.எம். முனாஸிக், தாழ்மையான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார். 

   இத்தேர்தலை  அமைதியாகவும், சுமூகமாகவும் வன்முறையற்ற தேர்தலாகவும் நடத்தி, சிறந்த முறையில் முடிவுகளைப் பெற்றுக்கொள்ள, வேட்பாளர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்களை அன்பொழுகக் கேட்பதாகவும், அமைப்பின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 ஐ. ஏ. காதிர் கான் 
 மினுவாங்கொடை நிருபர் 
Previous Post Next Post