Top News

ஏன் போர் உருவானது.. சிரியாவில் அமெரிக்கா, ரஷ்யா, ஈரானிற்கு என்ன வேலை



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
சிரியாவில் நடக்கும் போர் தற்போது தொடர்ந்து 10வது நாளாக நடந்து வருகிறது. இந்த போரில் அமேரிக்கா, ரஷ்யா, ஈரான் முக்கியமான பங்காற்றி வருகிறது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் இதுவரை 800 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

இந்த போரில் ரஷ்யா தலையிடுவதற்கு பின் நிறைய காரணம் இருக்கிறது. முதல் விஷயம் சிரியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது நிறைய பலனை கொடுக்கும். இரண்டாவதாக பனிப்போர் நடந்த சமயத்தில் சிரியா ரஷ்யாவிற்கு உதவியது. அப்போதில் இருந்தே சிரியா அதிபர் குடும்பமும் ரஷ்யாவும் மிகவும் நெருக்கம்.
   
ஈரான் ஷியா நாடு. சிரியாவில் நடக்கும் ஆட்சி ஷியா ஆட்சி. ஆனால் அங்கு இருக்கும் மக்கள் சன்னி மக்கள். ஷியா ஆட்சி அங்கு தொடர வேண்டும் என்பதற்காகவே ஈராக் தற்போது சிரியா அரசுக்கு உதவி வருகிறது. இதற்காக அவர்கள் பட்ஜெட்டில் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது.
   
சவூதி எப்போதும் போல ஈராக்கிற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து இருக்கிறது. சவூதி சன்னி நாடு, இதனால் சிரியாவின் ஷியா ஆட்சிக்கு எதிராக போராடும் போராளி குழுக்களுக்கு உதவி செய்து வருகிறது. அந்நாடு தீவிரவாத இயக்கங்களுக்கு உதவுவதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது. இவர்கள்தான் அதிக பண உதவி கொடுப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
   
துருக்கி உள்ளே வந்தது

அதேபோல் சிரியாவில் குர்தீஷ் இன மக்களும் போராளி குழுக்களில் இருக்கிறார்கள். இதனால் தற்போது துருக்கியும் போராளி படைகளுக்கு உதவி வருகிறது. போராளி குழுக்களுக்கு உதவும் இரண்டாவது பெரிய நாடாக துருக்கி இருக்கிறது.
   
இதில் அமெரிக்காதான் இரட்டை விளையாட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறது. சிரியாவிற்கு ஆதரவாக பேசுவது போல போராளி குழுக்களுக்கு உதவி செய்கிறது. அதே சமயம் போராளிகளிடம் பெரிய ஆயுதங்கள் கிடைக்காமல் இருக்கவும் முயற்சி செய்கிறது. இந்த போரை இவ்வளவு உக்கிரமாக மாற்றியதில் ரஷ்யாவிற்கு அடுத்து அமெரிக்கவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது.

கடல் வளம்

இங்கு பெரிய நாடுகள் ஆர்வம் கொள்ள இன்னும் காரணம் இருக்கிறது. இங்கு எண்ணெய் வளம் மிகவும் அதிகம். அரபு நாடுகளின் வியாபாரம் செய்ய சிரியா கடல் வேண்டும். இந்த கடல் வழியாகத்தான் முக்கிய போக்குவரத்து நடக்கிறது. இஸ்ரேல் மீது கண் வைக்கவும் சிரியா உதவி வேண்டும். இப்படி பல காரணம் இருப்பதால் சிரியாவை யார் கட்டுப்படுத்துவது என்று போட்டி நடக்கிறது
Previous Post Next Post