பாறுக் ஷிஹான்
மிக நீண்ட கால இடைவெளியின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கரிகோச்சி (Viceroy ) புகையிரதம் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
நேற்றையதினம் கல்கிசையிலிருந்து திருகோணமலைக்கு சென்ற புகையிரதம், அங்கிருந்து இன்று(25) கல்லோயா, மாகோ, அநுராதபுரம் செல்வதுடன் அங்கிருந்து நாளை (26) 8 மணிக்கு மணியளவில் பயணத்தை ஆரம்பித்து யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு வரவுள்ளது. இங்கிருந்து காங்கேசன்துறை ரயில் நிலையத்தை அடையவுள்ளது.
மறுநாள் (27) காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இருந்து கல்கிசை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
ஜெர்மன், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுடன் குறித்த புகையிரதம் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.