மிக் விமான நிதி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்ய புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
கோத்தபாயவுக்கு எதிராக ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சாட்சியாளராக பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அதற்கமைய நிதி மோசடி விசாரணை பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமான படைக்கு மிக் 27 விமானங்கள் 4 கொள்வனவின் போது இடம்பெற்ற கோடி கணக்கிலான மோசடி தொடர்பில் உதயங்கவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டுபாயில் கைது செய்யப்பட்ட உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்காக குற்ற விசாரணை திணைக்களம், நிதி மோசடி விசாரணை பிரிவு, குடிவரவு குடியகல்வு திணைக்களம், தூதரகம் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகிய அரசாங்க பிரிவுகள் கலந்துரையாடல் மேற்கொண்டு வருகின்றன.