மாற்றுக் கட்சிகளின் பலத்த பிரச்சார முயற்சிகளையும் உடைத்தெறிந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முசலி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட மருதமடு வேப்பங்குளம் வட்டாரத்தில் போட்டியிடும் சகோதரர் வஸீம் அவர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வேப்பங்குளத்தில் நேற்று இடம்பெற்றது.
மாற்றத்தை கோரும் பெருந்தொகையான மக்களின் பிரசன்னத்துடன் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ மஸ்தான் காதர் அவர்களின் தலைமையில் நேற்று இடம்பெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு அதிதியாக பங்கு பற்றிய ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சேனக்க அபேகுணசேகர ஒரு விடயத்தை நாசூக்காக தெரிவித்தார்.
அவர் சபையினரை விளித்துப்பேசிய பொழுது *தபால் தொலைதொடர்பு முஸ்லிம் சமய கலாச்சார பிரதியமைச்சர் மஸ்தான் அவர்களே எனக்குறிப்பிட்டே தனதுரையை ஆற்றத் தொடங்கியபொழுது எழுந்த கரகோஷம் வானைப் பிளந்தது.
இது அண்மைக்காலமாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் காதர் மஸ்தான் அவர்களுக்கு அமைச்சு ஒன்று வழங்கப்பட வேண்டும் என வன்னி மக்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர் மட்டத்தினரும் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளையடுத்து ஜனாதிபதி துரிதமாய் எடுத்த முடிவாகவும் இருக்கலாம்
நேற்று முன்தினம் வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் கெளரவ மஸ்தான் அவர்களுடைய செயற்பாடுகளையிட்டு தானும் கட்சியும் பெருமைப்படுவதாக குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.