அமைச்சரவை ரீதியில் மட்டுமன்றி கொள்கையளவிலும் எதிர்வரும் நாட்களில் மாற்றங்கள் பலவற்றை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக காணி மற்றும் பாராளுமன்ற சீர்திருத்த விவகாரங்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
காலி, இந்துருவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.