இராணுவத்தினர் கைது செய்யப்படுவது தொடர்பில் சமகால அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பாரிய நெருக்கடிகளில் இருந்து இராணுவத்தினரை சமகால அரசினால் காப்பாற்ற முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதாக தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் ஒரு அங்குல இடமேனும் வேறு எந்த நாட்டிற்கும் விற்பனை செய்வதற்கு நான் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் அரசர்கள் உட்பட அவ்வாறு செய்யவில்லை. அவ்வாறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நிரந்தரமாக வழங்கியது எனது நண்பர் மஹிந்த ராஜபக்ச தான் என அவர் தெரிவித்துள்ளார்.
பொத்துவில் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.