Top News

டெங்கு பரவலுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரே காரணம் - மஹிந்த



இலங்கையில் டெங்கு நோய் தொற்றினால் மக்கள் உயிரிழக்கும் காரணத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சமகால அரசாங்கம் அச்சம் காரணமாக இரண்டரை வருடங்களுக்கு மேலாக தேர்தலை நடத்தவில்லை. இதனால் நகரங்களில் குப்பைகள் அதிகரித்து டெங்கு நோய் தொற்றில் பலர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கல்கிஸ்சையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளை கலைத்து விட்டு தேர்தலை நடத்த தாமதித்துள்ளனர். உள்ளுராட்சி நிறுவனங்களை அரசாங்கம் தங்கள் கையில் எடுத்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளர்.

இவ்வாறான நிலைக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் பொறுப்பு கூற வேண்டும் என மஹிந்த கோரிக்கை விடுத்துள்ளார். இந்த காலத்திற்குள் நகரங்களில் குப்பைகள் அதிகரித்து துர்நாற்றம் வீச ஆரம்பித்து விட்டன. டெங்கு நுளம்பு தொற்றுகள் அதிகரித்துள்ளன.

டெங்கு தொற்றில் மக்கள் உயிரிழந்தனர். அரசாங்கம் கண்டுக்கொள்ளவில்லை என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post