நாட்டில் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று வதந்திகளைப் பரப்புவோருக்கு எரிபொருள் கூட்டுத்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் அண்மைக்காலமாக எரிபொருள் தட்டுப்பாடு குறித்த செய்திகள் வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றன. அதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் அவ்வாறான வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக எரிபொருள் கூட்டுத்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கொலன்னாவை எரிபொருள் விநியோக நிலையம், சப்புகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையம், முத்துராஜவெல எரிபொருள் களஞ்சியம் போன்றவற்றில் டீசல் மட்டுமன்றி பெற்றோல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களும் தாராளமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் எரிபொருள் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.