Top News

ஐ.தே.க.வுக்கு கிராமங்களின் அரசாங்கங்களைப் பெற்றுத்தாருங்கள் - பிரதமர்



அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றியை பெற ஐக்கிய தேசிய கட்சி பாடுபடவேண்டியுள்ளது. அதில்  வெற்றிபெற்று 2025ஆம் ஆண்டில் இந்த நாட்டை முன்னேற்றமடைந்த நாடாக மாற்றியமைக்கவேண்டும். அதற்காக ஐ.தே.க.வுக்கு கிராமங்களின் அரசாங்கங்களைப் பெற்றுத்தாருங்கள்” என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

காலியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“வறண்டு போயிருந்த ஐக்கிய தேசிய கட்சி என்ற மரத்துக்கு 2015ஆம் ஆண்டு உரமூட்டினோம்.

“ஐக்கிய தேசிய கட்சி 10 வருடங்கள் எதிர்க்கட்சியில் இருந்தது. ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் ஆட்சிக்கு வராது என்று பலர் எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் அதிகாரத்தை பெற்றோம். 2015ஆம் ஆண்டு இந்த நாட்டை முன்கொண்டு செல்வதற்காக நாங்கள் ஆட்சிக்கு வந்தோம்.

“எமது ஆட்சியில் நாட்டின் பல பிரச்சினைகளை தீர்த்துள்ளோம். இன்னும்  பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.

“அனைத்து விடயங்களையும்  இரண்டு வருடங்களில் செய்ய முடியாது.  அதனால் பெற்ற வெற்றியை நிரந்தரமாக்கவேண்டும். வெற்றியை தக்க வைப்பதா? அல்லது மீண்டும் தோற்பதா என்பதனை பெப்ரவரி 10 ஆம் திகதி தீர்மானிக்கவேண்டும்.”
Previous Post Next Post