ரவூப் ஹக்கீமின் அவசர கவனத்திற்கு!

NEWS



“ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது.”

சாய்ந்தமருதில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் கண்ணீர்ப்புகையில் இருந்து தப்பி ஓடியபோது விரட்டிப் பிடிக்கப்பட்ட சிறுவர்களும் பகுதிநேர வகுப்புகளிற்குச் சென்று வந்த மாணவர்களும் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

காடைத் தனங்கள் எந்தத் தரப்பில் இருந்து வந்தாலும் கண்டிக்கப் படல் வேண்டும் என்பதனை வலியுறுத்துவதோடு உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விடயத்தில் விஷேட கவனம் செலுத்தி சிறார்கள் மாணவர்களை குறைந்த பட்சம் எச்சரிக்கை செய்தாவது விடுவிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்களை வேண்டிக் கொள்கிறோம்.

முஸ்லிம் சமூகத்திற்கு இந்த கேடுகெட்ட கட்சி அரசியல் கொண்டுவரும் சாதனைகளை விட சோதனைகளே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறன, அதேவேளை முஸ்லிம் சமூகம் எதிர் கொண்டுள்ள ஏந்தவொரு சவாலையும் உரிய அரங்குகளில் சமாளிக்க வக்கில்லாது, அவற்றிற்கு முகம் கொடுக்க முடியாது..

பங்காளிச் சண்டைகளில் பிளவுபட்டு பிரிந்து நின்று கொழும்பில் சரணாகதி அரசியல் செய்யும் தலைமைகள் தேர்தல் காலங்களில் ஊருக்கு வந்து பாமார மக்களை உசுப்பேற்றி மோத விட்டு அவர்கள் மீது தமது அதிகார பலத்தை காட்டும் இந்த அவலத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.

இனாமுல்லாஹ் 
6/grid1/Political
To Top