தேசிய பட்டியல் நியமனத்தில் கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்தான் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் - மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்
அண்மையில் அட்டாளைச்சேனைக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நியமன உறுப்பினர் தொடர்பாக நடைபெற்ற வரவேற்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் அவர்கள் பேசுகையில் கூறியதாவது இவ்வூரின் நீண்ட நாள் கனவும் என்னால் வழங்கப்பட்ட வாக்குறுதியும் இன்று நிறைவேற்றி வைக்கப்பட்டதையிட்டு நான் பெருமிதமடைகிறேன்.
இருப்பினும் இப்பட்டியல் நியமனத்திற்கு பொருத்தமான கட்சியின் முன்னாள் மூத்த பொதுச் செயலாளரும் ஆரம்பகால ஸ்தாபக உறுப்பினருமான சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் அவர்களும் ஒருவராவார்.
அவர் இவ்விடயத்தில் எமது கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு பல விட்டுக்கொடுப்புகளுடன் பெரும் தியாகம் செய்து தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தி இக்கூட்டத்திற்கு வந்து இன்று தலைமை வகித்து இந்நிகழ்வை சிறப்பாக இம்மாபெரும் விழாவை நடாத்திவைப்பதையிட்டு நான் அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருகிறேன்.
அத்துடன் அன்னாருக்கு பொருத்தமான ஓர் உயர் பதவி ஒன்றையும் கட்சி விரைவில் வழங்கி வைப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேற்படி இக்கூட்டம் இக்கட்சியின் ஸ்தாபக பொதுச்செயலாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ.கபூர் அவர்களின் தலைமையில்தான் நடைபெற்றபோதே மேற்கண்டவாறு அமைச்சர் ரஊப் ஹக்கீம் அவர்கள் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் புதிதாக நியமனம் பெற்ற தேசிய பட்டியல் நியமன நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எல்.எம்.நசீர், விளையாட்டுதுறை பிரதியமைச்சர் எச்.எம்.ஹாரிஸ், சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசீம், திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஹாரிப் சம்சுடீன் உட்பட அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை போன்ற கட்சியின் முக்கியஸ்தர்களும் ஏனைய பிரமுகர்களும் ஆயிரக்கணக்கில் வந்து சிரப்பித்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.