பைஷல் இஸ்மாயில்
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான மொத்த ஆசனங்கள் - 18 ஆகும். இதில் 11 ஆசனம் தேர்வின் மூலமும், 7 ஆசனம் விகிதாரப் பட்டியலில் மூலமும் தெரிவாக இருக்கின்றது. இவர்களைத் தெரிவு செய்வதற்காக வேண்டி 30654 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் 24192 பேர் தங்களின் வாக்குகளை அளித்திருந்தனர். அதில் 206 வாக்குகள் நிராகரிக்கபட்டவையாக அமைந்திருந்தது.
அட்டாளைச்சேனை பிரதேசசபைக்கான தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னம் பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 11,361 ஆகும். எனவே, யானைச் சின்னம் பெற்றுக் கொள்ளும் ஆசனங்களின் எண்ணிக்கை 08 ஆக அமைகிறது.
ஏற்கனவே, குறித்த 08 ஆசனங்களையும், வட்டாரங்களில் யானைச் சின்னம் வென்று விட்டதால் யானைச் சின்னத்துக்கு விகிதாரப் பட்டியலில் ஆசனங்கள் கிடைக்க சத்தியமில்லை.
இந்த நிலையில் 7453 வாக்குகளைப் பெற்ற தேசிய காங்கிரசுக்கு 06 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஏற்கனவே, அட்டாளைச்சேனை தைக்கா நகர் வட்டாரத்தில் ஓர் ஆசனத்தை தேசிய காங்கிரஸ் வென்று விட்டதால், 05 ஆசனங்கள் விகிதாசாரப் பட்டியலில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த நிலையில், ஐக்கி மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னம் 4384 வாக்குகளை மொத்தமாக பெற்றுள்ளது. அதற்காக அக்கட்சிக்கு 03 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஏற்கனவே, பாலமுனை வட்டாரத்தில் ஓர் ஆசனத்தை மயில் சின்னம் வென்றெடுத்துள்ளதால், விகிதாசாரப் பட்டியலில் இருந்து 02 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
திகபாவி பிரதேசத்தில் தாமரை மொட்டுச் சின்னம் 779 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தை வென்றெடுத்துள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மு.கா. சார்பான யானைச் சின்னத்துக்கு 08 ஆசனங்களும், தேசிய காங்கிரசுக்கு 06 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பான மயில் சின்னத்துக்கு 03 ஆசனங்களும், தாமரை மொட்டுச் சின்னம் 01 ஆசனத்தை வென்றெடுத்துள்ளது.
அந்த வகையில், மு.கா. சார்பான யானைச் சின்னத்துக்கு 08 ஆசனங்களும், எதிர்கட்சிகள் 10 ஆசனங்களையும் பெற்றுள்ள இந்நிலைமையில், இந்த எதிர்க்கட்சியிலுள்ள 3 கட்சிகளும் இணைந்து அட்டாளைச்சேனை பிரதேச சபையை ஆட்சி அமைப்பதற்கான சகல முன்னெடுப்புக்களையும் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.