Top News

எனக்கு பிரதமர் பதவி தேவையில்லை; நான் ராஜாவாக இருந்தவன் - மஹிந்த ராஜபக்ச


ஒருபோதும் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பில் தனக்கு நெருக்கமான ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த தனது தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

ஒருபோது பிரதமர் பதவியை தான் ஏற்றுகொள்ளப்போவதில்லை எனவும் நான் நாட்டின் ஜனாதிபதியாக இருந்து சேவையாற்றிவன் என்னை சூழ்ச்சியின் மூலம் தோற்கடித்தனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்று நடைபெற்றது உள்ளூராட்சி தேர்தல் மாத்திரமே தவிர பிரதமரை தெரிவு செய்யும் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவில்லை என்பதனால் மஹிந்த ராஜபக்ச அவ்வாறான நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார்.
எப்படியிருப்பினும் எதிர்க்கட்சி தலைமை பதவி கூட்டு எதிர்க்கட்சிக்கு கிடைக்க வேண்டும் என்பது மஹிந்த ராஜபக்சவின் நிலைப்பாடு என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post