அம்பாரை நகரில் இன்று இரவு ஏற்பட்ட ஒரு அசம்பாவித சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அம்பாரை நகரில் உள்ள முஸ்லிம் ஹோட்டல் ஒன்றில் உணவருந்த வந்த பெரும்பான்மை வாலிபர்கள் ஹோட்டல் உரிமையாளருடன் ஏற்பட்ட வாய்தர்கத்தை தொடர்ந்து ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தியுள்ள அதேவேளை அங்குள்ள முஸ்லிம் வர்தக நிலையம் ஒன்றுக்கும் தீ வைத்துள்ளார்கள்.
முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் மஸ்ஜித் மீது காடையர்கள் மேற் கொண்டுள்ள தாக்குதல் நன்றாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப் பட்ட ஒரு இனவாத செயலாகவே தெரிகிறது.
நள்ளிரவு 12 மணிக்கு நூற்றுக் கணக்கான மோட்டார் சைக்கில்களிலும் ஒரு பஸ் வண்டியிலும் படையெடுத்து வரும் வரை இலங்கை காவல்துரை என்ன செய்து கொண்டிருந்தது.?
சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பொலிசார் எல்லா அடாவடித்தனங்களும் அரங்கேற்றப் பட்டு முடிந்த பின்னர் ஒன்றரை மணித்தியாலத்திற்கு பின்னரே வருகை தந்துள்ளனர்.
இனி நம்மட தலைவர்கள் ஹெலியில் ஸ்தலத்திற்கு விரைதலும் பார்வை இடுதலும் நஷ்டயீடு தறுவதாக வாக்குறுதி தந்து மறைதலும் என நாடகங்களுடன் படம் நிறைவுக்கு வரும்.
அழுத்கமை, ஜின்தொட்டை அம்பாறை என அடுக்குகளுக்குள் கோவைகள் அடிப்பட்டு விடும். இனவாதிகள் மீது விரல் நீட்டுவதை விடுத்து முஸ்லிம் சமூகம் தம்மை மீள்பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.
இருதலைக் கொல்லி எறும்பின் நிலையில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய சதிகள் அரங்கேற்றப்படுவதாக உணர முடிகிறது.
சட்டம் ஒழுங்கு அமைச்சராக நேற்று முன்தினம் தான் பிரதமர் ரணில் பதவியேற்றுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி, மாகாண சபைத் தேர்தல்கள் நெருங்கும் நிலையில் சவால்கள் விடுக்கப்படுகின்றன.