நல்லிணக்கத்தை பலப்படுத்தும் நோக்கில் சவுதி அரேபியாவுக்கு 100 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான யுத்த தளபாடங்களை பெற்றுக் கொடுக்கும் ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.
இந்த புதிய ஒப்பந்தத்தினால் அமெரிக்காவிலிருந்து சவுதிக்கு 670 மில்லியன் டொலர் பெறுமதியான யுத்த டாங்கிகள், 106 மில்லியன் டொலர் பெறுமதியான தாக்குதல் ஹெலிகொப்டர்கள் மற்றும் 300 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ வாகனங்கள் என்பன வழங்கப்படவுள்ளன.
தற்பொழுது சவுதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மட் பின் சல்மான் அமெரிக்காவிலுள்ள வொசிங்டன் நகருக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். சவுதி இளவரசர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இடையே விசேட சந்திப்பொன்றும் இந்த விஜயத்தின் போது இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.