ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 38 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகி ஜுலை 6 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக ஐ.நா. செயலகம் அறிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த பெப்ருவரி மாதம் 26ஆம் திகதி ஆரம்பமான கூட்டத்தொடர் நான்கு வாரங்கள் நடைபெற்றதன் பின்னர் நேற்று நிறைவடைந்தது.
இதில் இலங்கை தொடர்பான இரண்டு முக்கிய விவாதங்கள் கடந்த திங்கட்கிழமையும் புதன்கிழமையும் இடம்பெற்றதுடன் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா விசேட அறிக்கையாளர்கள் தமது விஜயம் பற்றிய அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தனர்.
மனித உரிமைக்கும் பயங்கரவாதத்திற்கும் எதிரான விடயத்திற்கு பொறுப்பாக கடமையாற்றிய,பேன் இமேசன் என்பவரது இலங்கை விஜயத்தின் அறிக்கையை இப்பதவிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருமதி பினனாலுலா நீஅலோ என்பவர் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.