2018 -2019ம் கல்வியாண்டிற்கான புதிய மாணவிகளை இணைத்துக்கொள்ளல்

NEWS




சிறந்த மார்க்கப்பற்றுள்ள தாயிய்யாக்களையும், கல்வியாலர்களையும் பெண் சமூகத்தில் உருவாக்கும் நோக்கில் இயங்கி வரும் எமது அல் கலீஜ் பெண்கள் அறபுக் கல்லூரியில் 2018-2019ம் கல்வி ஆண்டிற்கான புதிய மாணவிகளை இணைத்துக் கொள்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

மாணவிகளை இணைத்துக் கொள்வதற்கான நிபந்தனைகள்
புனித அல் குர்ஆனை பார்த்து பிழையின்றி ஓதத் தெரிந்திருத்தல்
சிறந்த நன்னடத்தை உள்ளவராக இருத்தல்
க.பொ.த சாஃத பரீட்சையில் 6 பாடங்களில் சித்தி பெற்று க.பொ.த உஃத கல்வியை தொடர்வதற்கு தகுதி பெற்றவராக இருத்தல்
கல்வியைத் தொடர்வதற்கு சிறந்த உடல், உள ஆரோக்கியமுடையவராக இருத்தல்
17 வயதிக்குற்பட்டவராக இருத்தல்
தேர்வு செய்யப்படும் முறை

    விண்ணப்பிக்கும் மாணவிகளின் பொது அறிவு, நுண்ணறிவை பரீட்சிக்கும் வகையில் நடாத்தப்படும்
பொது அறிவு பொது நுண்ணறிவு            வாய் மொழி
                        பரீட்சைகளில் தலா 50 புள்ளிகளை பெறும் மாணவிகள் கல்லூரியில் இணைத்துக்கொள்ளப்படுவர்.

கற்கை நெறி
நான்கு வருட கல்வி ஆண்டை கொண்ட எமது கல்லூரி பின்வரும் கற்கை நெறிகளை வழங்கி வருகின்றது
இஸ்லாமிய கற்கை நெறிகள் பு.ஊ.நு (யுஃடு) கலைப் பிரிவு
அறபு மொழி ஆங்கிலம்
சிங்களம் தையல் பயிற்சி

மேலும் அரசாங்கப் பரீட்சைத் திணைக்களத்தால் நடாத்தப்படும்
அல் ஆலிம் முதவஸ்ஸிதா அல் ஆலிம் தானவிய்யா
அஹதிய்யா தர்மச்சாரியா

போன்ற பரீட்சைகளில் சித்தியடைவதற்கான சிறந்த கற்பித்தல், வழிகாட்டல்கள் சர்வதேச, இலங்கைப் பல்கலைக் கழகங்களில் உயர் கல்வியைப் பூரத்;தி செய்த உலாமக்களாலும், கற்பித்தல் துறையில் சிறந்த அனுபவமுள்ள ஆலிம் மற்றும் ஆலிமாக்களாலும் வழங்கப்பட்டு வருகின்றன, மேலும் 25 வருட அனுபவத்தை கொண்ட பாடசாலை ஆசிரியர்களால் பு.ஊ.நு (யுஃடு) மாணவிகள் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.

எனவே எமது கல்லூரியில் இணைந்து தனது கல்வியை தொடர விரும்பும்; மாணவிகள் கல்லூரியின் காரியாலயத்தை தொடர்பு கொண்டு அல்லது றறற.கயளவடயமெய.டம என்ற இணைய தளத்தில் விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து 2018.03.28ம் திகதிக்கு முன்னர் பின்வரும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

தகவல்
அதிபர்
ஜமால்தீன் இர்சாத், ஷர்கீ

             






                                           
                                               
6/grid1/Political
To Top