Top News

25 வறிய கும்பங்களின் பிள்ளைகளுக்கு பாதணிகள் மற்றும் பாடசாலை உபகரண கொள்வனவுக்காக 50 ஆயிரம் வழங்கி வைப்பு






பைஷல் இஸ்மாயில், அப்ராஸ் -  

கல்வியுடன் இணைந்து தலைமைத்துவங்களையும் நல்ல பண்புகளுடன் ஒழக்கங்களையும் பாடசாலை மூலமாக மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் ஏ.எம்.பைறூஸ் தெரிவித்தார்.

கல்முனை அல்-மிஸ்பாஹ் மஹா வித்தியாலயத்தில் ஒழுக்காற்று சபையின் ஏற்பாட்டில் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு மற்றும் சான்றிதழ் வழங்கி வைத்தலும் பாடசாலையின் அதிபர் யூ எல்.எம்.அமீன் தலைமையில் (5) இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,     

மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ஒத்துளைப்பு வழங்க வேண்டும், ஆசிரியர்கள் உங்களுக்கான சகல வழிகாட்டல்களையும் முன்னெடுத்து வருகின்றபோது அவர்களின் முன்னெடுப்புக்களுக்கும், வழி காட்டல்களுக்கும் மாணவர்களாகிய நீங்கள் அவர்களை பின்தொடர்ந்து செல்லவேண்டும். இவ்வாறு செல்வதன் மூலமே எதிர்காலத்தில் ஓரு சிறந்த பிரஜையாக எதிர்காலத்தில் நீங்கள் பிரகாசிக்க முடியும்.                                                                                
இப்பாடசாலையில் கல்வி கற்கின்ற வறிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு என்னாலான பல உதவிகளை செய்ய நான் என்றும் தயாராகவுள்ளேன். அதற்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் வழிகாட்டலில் பல திட்டங்கள் மூலம் இப் பாடசாலையை அபிவிருத்தி செய்யவேண்டும் என்று பல திட்டங்களை வகுத்துள்ளேன் என்றார்.

இந்நிகழ்வின்போது 25 வறிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு தலா 1000 ரூபா பெறுமதியான பாதனிகளையும், பாடசாலை உபகரண கொள்வனவுகளுக்கான தேவைக்கு தனது சொந்த நிதியிலிருந்து 50 ஆயிரம் ரூபாவினையும் வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post