புத்தளத்தில் வெடிப்புச் சம்பவத்தில் 27 வயதுடைய நஸீர் வபாத்!

NEWS



புத்தளம், பாலாவி சந்தியில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் சேகரிக்கும் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே இடத்திலுள்ள பணியாளராக கடமையாற்றும் 27 வயதுடைய மொஹமட் நஸீர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பழைய இரும்பு பொருட்களுக்குள் இருந்த ஏதாவது ஒரு பொருள் வெடித்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
6/grid1/Political
To Top