மெனிக்ஹின்னயில் மாத்திரம் முஸ்லிம்களுக்கு 885 கோடி ரூபா இழப்பு!

NEWS


கடந்த வாரம் கண்டி மாவட்டத்தில் அரங்கேற்றப்பட்ட இனவன்முறைகளினால் மெனிக்ஹின்ன பகுதியில் மாத்திரம் முஸ்லிம் சமூகத்துக்கு 885 கோடி ரூபா இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளா்   திருமதி சமந்தி நாகத்தென்ன தகவல் வெளியிட்டுள்ளார்.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடுகள், வாகனங்கள் வா்த்தக நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டதன் பின்னணியில் பிரதேச சபை அலுவலக அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
6/grid1/Political
To Top