தீவிரவாத பௌத்த அமைப்புக்களின் வெறுக்கத்தக்க செயற்பாடுகள் அடக்கப்படல் வேண்டும் - Australia East Asia Forum

NEWS

தீவிரவாத பௌத்த அமைப்புக்களின் வெறுக்கத்தக்க செயற்பாடுகள் அடக்கப்படல் வேண்டும் என அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் ஈஸ்ட் ஏசியா போரம் என்ற இணையத்தளம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த கோரிக்கையில் மேலும்,

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் விடயத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கையின்மை பிரதான காரணமாக கூறப்படுகிறது.

எனவே, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தீவிரவாத பௌத்த அமைப்புக்களின் வெறுக்கத்தக்க செயற்பாடுகள் அடக்கப்படல் வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீடிக்கின்றபோது ஏற்படுகின்ற சிறுபான்மையினருக்கு எதிரான படைத்தரப்பின் செயற்பாடுகள் குறித்து விமர்சனங்கள் கூறப்படுகின்றன. எனவே பயங்கரவாத தடைச்சட்டம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும்.

அத்துடன், படைத்தரப்பின் நடவடிக்கைகள் மீது சிறுபான்மையினர் நம்பிக்கைக்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6/grid1/Political
To Top