அதிகாரத்தை தக்கவைக்கும் போராட்டத்தில் அவ்வப்போது இனவாதம் தோற்றுவிக்கப்படுகின்றது. இனவாத செயற்பாடுகளின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சியே உள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.
ஊழல் மோசடிகள் தொடர்பில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரும் நிலையில் ஜே.வி.பி பிரேரணையினை ஆதரிக்கும் எனவும அவர் குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.
நாட்டில் அண்மைக் காலமாக அராஜக செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றது. பிரதமரின் அணியும், ஜனதிபதியின் தரப்பும் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.
ரணில் - மைத்திரி இடையிலான முரண்பாடுகள் அதிரித்து வருகின்றது. சில நேரங்களில் இருவரும் இணைந்து செயற்படுவதும் சில நேரங்களில் இருவரும் முரண்படும் நிலைமைகள் காணப்படுகின்றது.
அமைச்சரவை திருத்தங்களின் போது ரணிலுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படுகின்றது, சில நேரங்களில் பிரதமரை பதவியில் இருந்து நீக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றது.
ஆகவே இவர்கள் நாட்டின் நலனுக்காக அக்கறை செலுத்தாது தமது தனிப்பட்ட அதிகாரங்களை தக்கவைக்கும் முயற்சிகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் வேலை வாய்ப்பில்லாத நிலைமை அதிகரித்து வருகின்றது.
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றது, ஆனால் இவற்றினை எல்லாம் கருத்தில் கொள்ளாது தமது தனிப்பட்ட அரசியல் நலன்களை கருத்தில் கொள்வதில் மாத்திரம் இவர்கள் அக்கறை செலுத்தி வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.