Top News

சிரியா நாட்டைப்போல் உருவாகி வரும் இலங்கை நாட்டை, பாதுகாக்க நாம் ஒன்றிணைய வேண்டும்.



பைஷல் இஸ்மாயில் 

மீண்டும் ஓர் சிரியா இலங்கயைில் உருவாகுவதை தடுக்க இலங்கை மக்கள் அனவைரும் ஜாதி ,மத பேதங்களை கடந்து ஒன்றுபட வேண்டிய நேரம் இன்றைய காலகட்டமாகும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுன கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளருமான பி.எச்.பியசேன தெரிவித்தார்.

சிறுபான்மை இனத்தவர்களுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் நிலைமை தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை (07) பொதுஜன பெரமுன கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரின் அக்கரைப்பற்றிலுள்ள தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடரந்தும் தெரிவிக்கையில்,  

இன்றைய நிலையில் முஸ்லிம் அரசியல் அரசியல் கட்சிகளின் தலைமைகள் அரசியல் வாதிகளை நம்பாமல் கண்டி தலதாமாளிகையின் அஸ்கிரிய பீடாதிபதியுடன் பேசி அதன் மூலம் முஸ்லீம் மக்கள் மீது இருக்கும் தவறான அபிப்பிராயங்களை சிங்கள மக்களிடம், இருந்து துடைத்தெறிய ஒன்றுபட்டு சிந்தித்து செயற்பட வேண்டிய நேரம் இத்தருனமாகும்.

வெறுமனே தொலைக்காட்சிக்கும், பத்திரிகைக்கும் அறிக்கை விடுத்து வீர வசனம் பேசும் தருணம் இதுவல்ல, ஏற்கனவே வீர வசனம் பேசிய அரசியல் வாதிகளை நம்பி நம் சகோதர இனம் ஒன்று அழிவின் விளிம்பிற்கே சென்றதை நாம் ஒர் முன்னுதாரணமாக கொள்ளவேண்டும்.

அரசியல் வாதிகளை நம்பினால் அவலம் எல்லை கடந்து போய்விடும். அரசிற்கு முட்டுக்கொடுக்கும் இஸ்லாமிய தலமைத்துவங்கள் காலவரையற்ற ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி கலவர பகுதியில் அமைதியை நிலைநாட்ட அரசை நிர்பந்திக்க வேண்டும். நல்லாட்சி மக்களுக்கு பொல்லாட்சியாக மாறுகிறது. இது இறைவனுக்கே பொறுக்காது. குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

பௌத்த மக்களும் இஸ்லாமிய மக்களும் பொறுமைகாக்க வேண்டிய நேரமாகும். எந்த ஒரு மதமும் வன்முறையை அனுமதிக்கவில்லை. புத்தரை நேசிக்கும் மண்ணில் கலவரமும் காற்புணர்சியும் அருவருக்கதக்கது. இவ்வாறான கலவரங்கள் எமது நாட்டின் ஸ்திர தன்மைக்கு அச்சுறுத்தலாகும்.

மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வது கண்மூடித்தனமாக அதிகாரம் செய்வதற்கோ மனம் போல் சுகபோகங்களை அனுபவித்து விட்டு மக்களுக்கு நெருக்கடி துன்பம் வரும் போது தீக்குளிப்போம் தற்கொலை செய்வோம் என்று அறிக்கை விடுவதற்கோ அல்ல,
இஸ்லாமிய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளை மறந்து மக்களின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் வன்முறையை நிறுத்து முயலவேண்டும். இல்லையேல் நாங்கள் அரசிற்கு வழங்கும் ஆதரவினை உடனடியாக நிறுத்துவோம் என்று ஒருமித்து கூறினால் இன்று நடக்கின்ற வன்முறைகள் யாவும் ஒரு சில மணி நேரத்துக்குள் இந்த நிலைமை தலைகீழாக மாறி நாட்டில் ஒரு அமைதியான சூழ் நிலை உறுவாகும். 

இதற்காக எல்லா முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயற்படவேண்டும். அதற்கு நாங்கள் எல்லோரும் கைகோர்ப்போம்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் இதனை முன்னெடுக்கவேண்டும். இது அவ்வாறில்லாமல் மக்களுக்காக உயிரை இழப்போம், தாக்கப்பட்ட இடங்களை சம்பவம் நடந்த பின்னர் அதனைப் பார்வையிடுவதற்காக நீ முந்தி, நான் முந்தி என்று சொல்லிக்கொண்டு பார்வையிடுபவர்களாகவே இன்றைய முஸ்லிம் தலைமைகள் காணப்படுகின்றது. 

மக்கள் எம்மை நம்பி வழங்கிய ஆணையை மதித்து அவர்களுக்கு பாதிப்புக்கள் இடம்பெறுகின்றபோது அந்தப் பதவிகளை நாம் இழக்க ஒருபோதும் தயங்கக் கூடாது. எம்மக்களுக்காக நாம் பாடுபடும் வரை வாழ் நாள் முழுவதும் எம் மக்கள் எம்மை தலைமேல் சுமந்துகொள்வார்கள். இந்த நிலைமையை நாம் மாற்றியமைக்காத வரை சிறுபான்மை சமூகத்துக்கு எப்போதும் ஒரு சாபக்கேடுதான் நிலவும் என்றார்.
Previous Post Next Post