தமக்கு நடந்த நம்பிக்கை மோசடிகளை பார்க்கின்றபோது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனியும் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கஷ்டமான விடயம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கட்சியின் சார்பாக தெரிவான உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று மாலை நடைபெற்றது.
அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார் என கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 3 வாரங்களாக சிறிகொத்தவில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களை சந்திந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
எனினும், அதன் பின்னர் நடந்த விபரீதங்களையும் வைத்து பார்க்கின்றபோது, இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கஷ்டமான விடயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியீட்டிய சபைகளில், தம்மை புறந்தள்ளிவிட்டு மாற்று அணிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்தால் அரசியல் ரீதியாக அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை கட்சித் தலைவருடன் இடம்பெற்றது.
அதன் இறுதி முடிவுகள் இன்னும் ஓரிரு தினங்களில் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி நாடுதிரும்பியவுடன் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவின் பின்னர்தான் இறுதி தீர்மானங்கள் எட்டப்படும்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் மாவட்ட தலைமைகள் ஆட்சியமைப்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதற்கான முடிவுகளை விரைவில் அறிவிக்க உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.