சிங்கள மக்கள் பொறுமையாக இருப்பதை போல் முஸ்லிம் மக்களும் பொறுமையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்,நாட்டில் ஏற்பட்டுள்ள இனங்களுக்கிடையேயான அசாதாரண சூழ்நிலைக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை தான், நான் செய்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்று -09- வெள்ளிக்கிழமை காலை கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி, சர்வ மதத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
முஸ்லிம் மக்கள் என்னிடம் வேண்டிக்கொண்ட தன் அடிப்படையில் தான் இந்த கலந்துரையாடலில் நான் கலந்துகொண்டேன் என தெரிவித்த அவர் ஒரு மத்தியஸ்தராகவே இங்கு நான் செயல்பட்டதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து அரசு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அமைதியுடனும், பொறுமையுடனும் அனைத்து மக்களும் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.