உள்ளங்களை கவரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ....!!

NEWS
1 minute read


தற்போது உலகையே கவலையில் ஆழ்த்தியிருக்கும் சிரியா மக்களின் மீதான ரஷ்யா கூட்டுபடை,அதிபர் ஆசாத்தின் கொலை வெறி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சிரியா மக்களின் மீது இவரது முழு கவனமும் திரும்பியுள்ளது.
"சிரியா மக்களே!உயிருக்கு பயந்து நீங்கள் வாழ்ந்தது போதும்!
கனடாவை நோக்கி வாருங்கள்!
இனி இது(கனடா) உங்கள் நாடு!
உங்களுக்கு நான் பாதுகாப்பாக இருப்பேன்!"
எனும் இவரது பகிரங்க அழைப்பால் பல மக்களின் உள்ளங்களை ஈர்த்துவிட்டார்.
வெறும் பேச்சாக மட்டுமல்லாமல் அதற்காக இவர் செய்த வழிமுறைகளை காணும்போது நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது..
சிரியா மீதான போர் கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பித்த உடனேயே அங்கிருந்து 300 அகதிகளை தனது நாட்டிற்கு அழைத்து அடைக்கலம் கொடுத்துள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 800க்கும் மேற்பட்ட சிரியா மக்கள் கனடாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இவர்களுக்காக எளிதான முறையில் விசா கிடைக்கவும்,குடியுரிமையும் பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உலக வலராற்றிலேயே இப்படி ஒரு வழிவகையை எந்த நாடுமே செய்ததில்லை என ஊடகங்கள் கூறுகின்றன.
மேலும் சிரியா மக்களின் வசதிக்காக தனது நாட்டின் சில சட்ட விதியில் மாற்றங்கள் வேண்டுமானாலும் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
அகதிகளை பற்றி அறிய இணையதள சேவை அறிமுகப்படுத்த பட்டுள்ளது.
தனது நாட்டிலுள்ள சிரியா மக்களின் குழந்தைகளுக்காக இலவச படிப்பு வசதி செய்து தரப்பட்டுள்ளது.
இதனால் மனம் நெகிழ்ந்த கனடா வாழ் சிரியா முஸ்லிம்கள் தமது நன்றிக்கடனாக தனக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு 'ஜஸ்டின்' என இவரது பெயரை சூட்டியுள்ளனர்.
ஒரு சாதாரண கடைநிலை அரசாங்க அதிகாரி நேர்மையாக நடந்தாலே அதனை ஆச்சர்யத்தோடு பார்க்கும் அதிகாரிகளுக்கு மத்தியில் ஒரு நாட்டின் பிரதமர் இந்தளவிற்கு மனித நேயத்தோடும்,அன்பு உள்ளத்தோடும் அதிரடி பணிகளை செய்து பாராட்டுகளை குவிக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவிற்கு இறைவன் நேர்வழியை தருவானாக!
6/grid1/Political
To Top