பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றியுள்ள ஹர்சா டி. சில்வா மற்றும் பிமல் ரட்நாயக்கா ஆகியோர் முஸ்லிம் அடிப்படைவாதம் குறித்து பேசியுள்ளமை ஆச்சரியமளிப்பதுடன், அவர்கள் இருவர் மீதும் முஸ்லிம் சமூகத்திற்கு இருந்த நம்பிக்கை வீண் போகியுள்ளதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சமூகம் தற்போது நொந்து போயுள்ளது. இந்நிலையில் அவர்கள் முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றியும், அதனுடன் இலங்கை முஸ்லிம்களை இணைத்தும், அவர்களினĮ#3021; ஆடைகளை விமர்சித்தும் உரையாற்றியுள்ளனர்.
குறித்த இருவரும் புத்திஜீவிகள். இவர்களே இப்படி பேசுகிறார்கள் என்றால் சாதாரண சிங்கள மக்களின் நிலையை நாம் சொல்லித்தான புரிய வேண்டுமென்றில்லை.