அட்டானைச்சேனை பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. நடைபெற்ற பரதேச சபைத் தெர்தலில் 08 ஆசனங்களை பெற்று முன்னிலை வகித்ததோடு ஆட்சியமைப்பதற்கு ஒரு ஆசனம் தேவைப்பட்டிருந்தது. இந்த அடிப்படையில் இனறு கூடிய முதலாவது அமர்வில் பொதுஜன பெரமுன முஸ்லிம் காங்கிரசோடு இணைந்து கொண்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய காங்கிரஸ் ஆகியவை இணைந்து 09 ஆசனங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் பொதுஸன பெரமுன இணைந்து 09 ஆசனங்களை சமநிலையாக வைத்துக் கொண்டதன் அடிப்படையில் தவிசாளர் பிரதித் தவிசாளர் பதவிக்காக குலுக்கல் முறை மூலம் போட்டி நடைபெற்றது.
இதில் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்று தவிசாளர் பதவியை தனதாக்கி சபையைக் கைப்பற்றியது. என்றாலும் பிரதித் தவிசாளர் பதவி குலுக்கல் முறை மூலம் தேசிய காங்கிரஸ் பக்கம் கை நழுவியது. தவிசாளராக ஒலுவில் நபீல் அமானுல்லாஹ் அவர்களும் பிரதித் தவிசாளராக ஜஃபர் உம் தெரிவு செய்யப்பட்டனர். இந்த அட்சி அமைவதற்காக பராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் அவர்கள் அதிக பிரேயத்தனம் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.