(அஷ்ரப் ஏ சமத்)
இனங்களுக்கிடையே மீண்டும் விரிசலை ஏற்படுத்த ஒரு குழு நாடளாவியரீதியில் இயங்கிவருவதையும் சமூகவலைத்தளங்களில் கொத்து ரொட்டியில் மாத்திரை போடுவதாகவும் சில விஷமப் பிரச்சாரங்கள் வெளிவந்திருந்தன.
இது பற்றி நாம் ஒரு மாதகாலத்திற்கு முன்னதாகவே ஜனாதிபதி, பிரதமர், உட்பட பொலிஸ் மாஅதிபர் ஆகியோருக்கும் எடுத்துக் கூறியிருந்தேன். இதுகுறித்து இவர்கள் எவரும் கவனத்தில் எடுக்கத் தவறிவிட்டனர்.
அதன் பின்னணியிலேயே அம்பாறை நகர்ச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனத் தெரிவித்த கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணர் முஜிபுர் ரஹ்மான் இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சியாம்பலான்டுவ பகுதியிலும் முஸ்லிம்களின் கடைகள் மீது அச்சுறுத்தப் பட்டுள்ளது. இதனால் முஸ்லீம்கள் பெரும் பீதியடைந்த நிலையில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

(1) வியாழக்கிழமை அவரது கிராண்ட்பாஸ் அலுவலகத்தில் நடத்திய அவசர ஊடகவியலாளர் மாநாட்டின்போதே முஜிபுர்ரஹ்மான் மேற்கண்டவாறு தெரவித்தார். அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியாதாவது -
இந்த நாட்டில் 2015 ஜனவரி 8 ஆம் திகதி 62 இலட்சம் மக்கள் வாக்களித்து இந்த நல்லாட்சியை ஏற்படுத்தினார்கள். அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்கள் 95 வீதமாக வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பாறை நகரில் 500 மீட்டருக்கு அப்பால் உள்ள பொலிஸ் நிலையம், விமானப்படை, தரைப்படை முகாம்கள் இருந்தும் அம்பாறை பள்ளிவாசல் , மற்றும் வர்த்தகநிலையங்களை சேதமாக்கும் வரை இவர்கள் எங்கு சென்றிருந்தனர்?;.
ஆகவே இது குறித்து சட்டம் ஓழுங்கு அமைச்ரான பிரதமமந்திரியும் அவசரமாக இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் ? என அடையாளம் கண்டு சட்டத்தின் முன் இவர்களை நிறுத்துதல் வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் சில குழுக்கள் இவ்வாறு செயல் பட்டுவந்தன மீண்டும் இவர்கள் இனங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்த விளைகின்றனர். அரசாங்கம் உடனடியாக இவ் விடயத்தில் முற்றுப் புள்ளி வைத்தல் வேண்டும்.
அண்மையில் சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று சிறுபான்மை மக்கள் வாழ்வதற்கு இலங்கை உகந்ததல்ல எனக் கூறியிருந்தது. அதனை அரசாங்கம் மறுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கமளித்து இந்த ஆட்சி மலர்ந்த பினனர் சிறுபான்மையினர் அமைதியாக வாழ்ந்துவருவதாக அறிக்கையிட்டனர்.. ஆனால் இவ்வாறான சிறு சிறு சம்பவங்களினால் மீண்டும் சிறுபான்மையினர் வாழ முடியாது என்பதை உலக நாடுகளில் நியாயப்படுத்துவது போன்றதாகிவிடும். அரசாங்கம் வெறுமனமே ஊழல் பற்றி பேசிக்கொண்டிருக்காமல் இனங்களுக்கிடையே விரிசல்களை ஏற்படுத்தும் குழுக்களை இனங்கண்டு இன நல்லுறவைப் பேனுதல் வேண்டும். இந்த அரசில் இன நல்லுறவு அமைச்சுககள் இரண்டு; ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மூன்று தேர்களின்போதும் கணிசமான முஸ்லீம்கள் ஜ.தே.கட்சிக்கே வாக்களித்துள்ளனர். இவ்வாறன நிலையில் முஸ்லீம்களது பள்ளிவாசல்களையும், வர்த்தகநிலையங்களையும் தாக்குவார்களேயானால் இறுதியில் ஜ.தே.கட்சியிலும் சிறுபான்மையினர் நம்பிக்கை இழந்திடுவார்கள். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டம் ஒழுங்கு அமைச்சராக பதவியேற்று இரண்டு நாட்களுக்குள் இச்சம்பவம் நடைபெற்றிருக்கின்றது. இதன் பின்னணியில் உள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்தல் வேண்டும். எனவும் பாராளுமன்ற உறுப்பிணர் முஜிபு ரஹ்மான் வேண்டுகோள் தெரிவித்தார்.