Top News

ஜம் - இய்யத்துல் உலமா விடுக்கும் வேண்டுகோள்



( ஐ. ஏ. காதிர் கான் )

   அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து முஸ்லிம் அமைப்புக்களுடன் இணைந்து, விசேட  அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
   அந்த விசேட அறிவித்தல் வருமாறு :

   அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையில் ஒன்று கூடிய அனைத்து முஸ்லிம் அமைப்புக்களும்,  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள  நெருக்கடி நிலையைக் கவனத்திற்கொண்டு பின்வரும் விடயங்களை இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு அறிவிக்கின்றது.

1)            அரசாங்கம் அவசர கால சட்டத்தை அமுல் செய்திருப்பதால் பகுதி நேர மத்ரஸாக்கள்,மக்தப்கள், இஸ்லாமிய தனியார் பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்குமாறு அறிவுரை பகர்கின்றது.

2)            அவசியமற்ற பயணங்களைத் தவிர்ந்துகொள்ளுமாறு இலங்கைவாழ் முஸ்லிம்களை பொதுவாகவும் இஸ்லாமியப் பெண்களை குறிப்பாகவும் கேட்டுக் கொள்கின்றது.

3)            மஸ்ஜித்கள், வீடுகள்,வியாபாரஸ்தலங்களை நாட்டின் சட்டத்தைக் கவனத்திற்கொண்ட நிலையில் பாதுகாப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஊர்த் தலைவர்கள், பள்ளிவாசல் நிருவாகிகள், உலமாக்கள் ஆகியோர் அவ்வந்தப் பகுதிகளிலுள்ள பாதுகாப்புப் படையினர், மதத் தலைவர்கள்,சமூகப் பிரதிநிதிகள்,அனைவருடனும் இணைந்து மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றது.
Previous Post Next Post