கண்டியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் சிங்கள இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட அழித்தொழிப்பு நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டு சம்பத்தப்பட்டவர்கள் என்ற பெயரில் அவசரகாலச் சட்ட விதிகளுக்கு ஏற்ப கைதுகள் இடம்பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள செய்திகள் போலீஸ் திணைக்களத்தினால் அவ்வப் போது அறிவிக்கப்பட்டு வருகிறது .
இதனிடையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசினால் துரித கெதியில் நிவாரணப் பணிகள் நஷ்ட ஈட்டுத் தொகைகள் என வழங்கப் பட்டுவரும் நிலையில் அரசியல் வாதிகளின் வீர பேச்சுக்களும் பாராளுமன்றத்தை அழகு படுத்தி வருகின்றன .
சம்பவங்கள் நடந்து முடிந்த பிறகு நஷ்டஈட்டுப் போராட்டங்கள் நடத்துவதும் பாராளுமன்றத்தில் இளைஞ்சர்களையும் தொண்டர்களையும் உச்சாகம் ஊட்டுவதற்காக ஆயுதப் போராட்டம் ஒன்றை நோக்கி நகரும் ஆபத்தை முஸ்லீம் சமூகம் எதிர்நோக்கிறது என்ற தொனியில் மாறி மாறி அரசியல் வாதிகளின் பேச்சுப் போட்டிகளும் இடம்பெற்று வருகிறது .
ஆனால் உலமாக்களோ முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக பின்னப்பட்டுள்ள சதிவலைகளை உடைத்து எறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதை விடுத்து துவாச் செய்யுங்கள் என்பதோடும் இப்போது ஸதகாக்களை வழங்குங்கள் என்ற அறிக்கைகளோடும் சுருங்கி கொண்டுள்ளனர்.
உலமாக்கள் இரண்டாக்கப் பிரிந்து ஒரு நாட்டின் பரந்த அறிவில்லாத நிலையில் தீவிர வாத சிந்தனைப் போக்கில் கருத்துக் களை தெரிவிப்பதும் முஸ்லிம்சமூகத்தின் உணர்ச்சிகளை தட்டிவிடும் நோக்கில் மிக மோசமான காலத்திற்கு பொறுத்த மில்லாத பத் வாக்களை வழங்குவதுமாக காலத்தை கழித்துக் கொண்டு வருவதே முஸ்லீம் சமூகத்தின் ஷாபாக் கேடாகும்
மேலும் காத்தான்குடியை தளமாகக் கொண்டு இயங்கி வரும் தாருல் அதிர் நிறுவனரும் மௌலவியுமான ஸஹ்ரான் அவர்களின் அவசரகால மார்க்கத்தீர்ப்பு ஒன்றினை முகப்புத்தகத்தில் மிக அண்மையில் வெளியிட்டு இருந்தார் இது நாட்டின் இச்சூழலில் பெரும் ஆபத்தான செயலாகும் இவர் யார் இவரின் பின்னணி என்ன என்பது பேச வேண்டிய அவசியம் இருக்காது இவர் இளமை காலத்தில் ஒரு துடிப்பான தாயீயாகக் காணப்படுகிறார் அத்தோடு பொதுவாக கிழக்கில் முஸ்லிம்சமூகத்தில் புகுத்தப்பட்டுள்ள இந்துத்துவா சிந்தனைப்போக்கிக்கிற்கு எதிராக அண்மைக்காலங்களில் ஆளுமையோடு செயற்பட்டார் வேகத்தை மட்டுமே கொண்டிருந்த அவர் விவேகம் உள்ளவராக காணப்படவில்லை தனக்கு முன்னாள் ஏற்பட்ட ஒரு சிறிய பிரச்சினையை சரியாக கையாலாகாத நிலையிலேயே தலைமறைவாகியுள்ளார் .
இச் சூழலில் இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் இதுவரை முஸ்லீம் தீவிர வாதக் குழுக்களோ அல்லது தீவிர வாத இயக்கங்களோ இருப்பதாக அரசுக்கு அறிவிக்க வில்லை ஆனால் இப்போது ஸஹ்ரான் மௌலவியின் பத்வாக்களுக்கு பின்னரான நாட்களில் விரிவான தீவிர விசாரணை ஒன்றினை முன்னெடுத்து வருவது புலனாகிறது .
முஸ்லிம்சமூகத்தின் புத்தி ஜீவிகளோ அமைதியாகவும் மௌனமாகவும் இருந்து வருகின்றனர் ஆனால் இதுவரை இன வன்முறை ஒன்றை தூண்டுவதற்காக கூறப்பட்டுவரும் காரணங்கள் குறித்து ஆய்வின் அடைப்படையிலான உறுதியான எந்த காரணங்களையும் இதுவரை உலமாக்களோ புத்திஜீவிகளோ வெளியிட்டதாக தெரிய வில்லை ஆனால் சிங்கள சமூகத்தில் உள்ள புத்திஜீவிகளில் சிலர் பிழையான தகவல்களின் அடிப்படியில் சிங்கள சமூகம் முஸ்லீம் சமூகத்தின் பிழையான வழிமுறைகளின் மூலம் இலங்கைத் தீவில் பெரும்பான்மை சமூகமாக மாறுவதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் .
ஆனால் முஸ்லீம் சமூகம் பெரும் அபாயகரமான சூழலை எதிர் நோக்கி யுள்ளது என்பது மட்டும் தெளிவாகிறது இரண்டு ஆயுதப் புரட்சிகளை முற்றாகவே அழித்தொழித்த புலனாய்வுப் பிரிவையும் பலமிக்க இராணுவ கட்டமைப்பையும் கொண்டுள்ள ஒரு இராணுவமும் உள்ள நாட்டில் ஒரு கிராமத்தை பாதுகாக்க முடியாது எனில் இதன் பின்னணியில் உள்ள காரணிகளை இலகுவாக அடையாளம் கண்டு கொள்ள முடியும் ஒன்று சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சி அமைக்க துடிக்கும் அரசியல் குழுவும் தனி பௌத்த நாடொன்றை அமைக்க துடிக்கும் பௌத்த இனவாத தலைமைகளும் ஒளிந்திருப்பது தெளிவாகிறது .
இரண்டு சிந்தனைகளின் கவரப்பட்ட அரச பாதுகாப்புக் கட்டமைப்பு நிருவாக சேவைகள் என்பவற்றில் உள்ள மேலதிகாரிகளால் நடத்தப்படும் நிழல் அரசே எமக்கு பெரும் ஆபத்தாகும் கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்தின் போது இனவாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாமல் மறைமுகமாக அவர்களுக்கு ஒத்தாசை வழங்கி இருந்தமை இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது .
எனவே முஸ்லிம்சமூகத்தின் புத்திஜீவிகள் உலமாக்கள் ஒன்றிணைந்து தற்போதுள்ள நிலைமை குறித்து ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் அதன் அடிப்படியில் முஸ்லிம்சமூகத்தின் இருப்புக்கானதுமான உரிமைப் போராட்டம் ஒன்றினை தொடராக மேற்கொள்ளவதட்கான கட்டமைப்பை உருவாக்குதல் அவசரகால நிலைமைகளின் போது ஒருங்கிணைக்கப்பட்ட வேலைத்திட்டம் போன்றவை குறித்தும் அவ்வப்போது எழும் பிரச்சினை குறித்த தகவல்களை பெறக்கூடிய ஊடக மத்திய நிலையத்தை உருவாக்ககுதல் இலங்கை தனியான ஊடகம் ஒன்றை உருவாக்குதல் , மற்றும் சர்வதேச முஸ்லிம்களின் ஒத்துழைப்பெறுவதற்கான புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்களின் சர்வதேச கூட்டமைப்பை உருவாக்கி பலமான உரிமைப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறைகளை திட்டமிடல் போன்ற நடவடிக்கைளை இலங்கையின் உலமாக்கள் சமூகக்த்தின் சிறந்த அரசியல்வாதிகளை தெரிவதற்கான வழிகாட்டகளையும் தாமாக முன்வந்து வழிநடத்த வேண்டும் இன்னும் நாம் குறை குறிக் கொண்டிருப்பதில் காலத்தை கடத்தினால் நாம் அழிவை எதிர்பார்த்து காத்திருப்பதே எமது நிலையாகும்
-முஹம்மது பாயிஸ்-